Tamilisai Soundararajan Press Meet: திருவள்ளூர் மாவட்டத்தின் பாஜக மாவட்ட அலுவலகத்தில் இன்று தமிழிசை செளந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 35 கல்லூரிகளில் ஒரு ஆசிரியரும் பணி நியமிக்கவில்லை. தற்காலிக ஆசிரியர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றனர். பணி நியமனத்திற்காக 16,000 செவிலியர்கள். 19000 அரசு மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். திமுக ஆட்சியில் ஆர்ப்பாட்டமே முக்கிய பங்கு வகித்து வருகிறது. செல்வப் பெருந்தகை கூறுகிறார், அடுத்த தலைமுறைக்கான கூட்டணி இந்திய கூட்டணி என்று. போரில் கூட காங்கிரஸ் அரசியல் செய்கிறது.நாங்கள் அனைவரும் முருகர் பக்தர்கள், நாங்கள் மாநாடுக்கு போகுவதற்கு உங்களுக்கு ஏன் பதற்றம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பதட்டத்தில் உள்ளார். அமைச்சர் சேகர்பாபு பதட்டத்தில் உள்ளார். தமிழக அரசாங்கமே பதட்டத்தில் உள்ளது.
அண்ணன் திருமாவளவனிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு எதிராக மனித சங்கிலி நடத்துகிறீர்கள். வேங்கை வெயிலில் பட்டியலின சகோதர்கள் நலமாக தண்ணீர் குடிப்பதை விடுத்து மலமாக தண்ணீர் குடிக்க வைத்தார்கள். அவர்களுக்கு நியாயம் கிடைக்க மனித சங்கிலி நடத்தினீர்களா. உங்களின் நோக்கம்தான் என்ன. உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் ஒதுங்கி போங்கள் நம்பிக்கை உள்ள எங்களை கேள்வி கேட்பது உரிமை உங்களுக்கு இல்லை.
கூட்டணியில் உள்ள கட்சிகள் அண்ணன் திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் ஆவதற்கு ஆசை உள்ளது. உங்க கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். 100 ரூபாய் கேஸ் மானியம் கொடுப்பேன் என்று சொன்னீர்கள், ஆனால் கொடுக்கவில்லை. காவல்துறை அதிகாரிகளே கைது செய்வதும், காவல்துறை அதிகாரிகள் பற்றி நீதிமன்ற விவாதம் வருவதும் கவலை அளிக்கிறது. வேங்கை வயல் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. காவல்துறை கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். காவல்துறையில் இருக்கிற முறைகேடுகளை முதலமைச்சர் தீர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் வாங்குவது கட்டாயமா? அதிகாரிகள் விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ