BJP Vanathi Srinivasan: பாஜக மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில்ம், அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்தால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

Vanathi Srinivasan Health Issue Update: கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் உடல் நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் தற்போது ஐசியூவிற்கு (ICU) மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தலைவராக இருந்து வருபவர் வானதி ஸ்ரீனிவாசன். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசனை தோற்கடித்து 53209 வாக்குகளை பெற்று அமோக வெற்றியை பெற்றார். அந்த தேர்தலில் 4 பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். அதில் வானதி ஸ்ரீனிவாசனும் ஒன்று. இந்த சூழலில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், வானதி ஸ்ரீனிவாசன் கோவை வடக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், வானதி ஸ்ரீனிவாசன் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் ஐசியூவிற்கு (ICU) மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக இருக்கிறது. பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த சூழலில், அவர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில்தான், நேற்று (ஏப்ரல் 10) வானதி ஸ்ரீனிவாசனுக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர் கால்வலியால் மிகவும் அவதிபட்டுள்ளார். இதையடுத்து காலில் வீக்கம் ஏற்பட்ட நிலையில், திட்டமிட்டிருந்த பிரச்சாரத்தை ரத்து செய்தனர். பின்னர் KMCH கோவை மெடிக்கல் செண்டர் மருத்துவமனையில் வானதி ஸ்ரீனிவாசன் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பாக்டீரியா தொற்றால், வலது காலில் பிரச்சனை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றன்ர். இதையடுத்து அவருக்கு அதற்கேற்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு மருந்தினால் ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று (ஏப்ரல் 10) இரவு ஐசியூவில் (ICU) மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். தற்போது அவர் உடல்நலத்துடன் உள்ளார். இந்த தகவலை மருத்துவமனை உறுதி செய்துள்ளது.
வானதி ஸ்ரீனிவாசன் இன்னும் 3 முதல் 4 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக வானதி ஸ்ரீனிவாசனால் அடுத்த சில நாட்களுக்கு கோவை வடக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாது என்பது உறுதியாகி உள்ளது. வானதி ஸ்ரீனிவாசனுக்கு பதிலாக அண்ணாமலை போன்றோர் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ