இந்தியா - பாகிஸ்தான் போர்: ஐபிஎல் நடத்தினால் ரத்த ஆறு ஓடும்.. சென்னைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை சேப்பாக்கத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

Written by - R Balaji | Last Updated : May 9, 2025, 04:35 PM IST
  • இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்
  • சென்னை சேப்பாக்கத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்தியா - பாகிஸ்தான் போர்: ஐபிஎல் நடத்தினால் ரத்த ஆறு ஓடும்.. சென்னைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்

ஜம்மூ காஷ்மீரின் பகல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க பல்வேறு மறைமுக நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இச்சூழலில் மே 6ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற இராணுவ நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி தரைமட்டமாக்கியது.  

Add Zee News as a Preferred Source

இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்து போர் பதற்றம் அதிகரித்தது. பாகிஸ்தானும் இந்தியாவை தாக்க வேண்டும் என்று 15 முக்கிய நகரங்களை குறிவைத்தது. ஆனால் அதை இந்தியா முறியடித்தது. இதையடுத்து நேற்று (மே 08) ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் திடீர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தியது. எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சூடு சண்டை நடந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவாகி உள்ளது. 

இச்சூழலில் இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சேப்பாக் மைதான அலுவலகத்திற்கு பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த இமெயிலில், ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக ஐபிஎல் போட்டி நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும். ஐபிஎல் நடத்தினால் ரத்த ஆறு ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிங்க: இப்போ ஐபிஎல் இல்லைனா.. அப்ப எப்போ? பிசிசிஐ-யின் திட்டம்தான் என்ன? ஓர் பார்வை!

மேலும் படிங்க: IPL 2025: ஐபிஎல் அதிகாரப்பூர்வமாக ஒத்திவைப்பு... பிசிசிஐ வைத்த ட்விஸ்டை பாருங்க!

 

About the Author

Trending News