)
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தருகின்றனர். தற்போது தேர்வு விடுமுறை என்பதாலும் இன்று பிரதோஷம் என்பதாலும் காலை முதல் அதிகளவிற்கான பக்தர்களின் வருகை இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
இதைடுத்து மதுரை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் மோப்பநாய் உதவியுடன் மீனாட்சி அம்மன் கோவிலுள் உள்ள அம்மன், சுவாமி சன்னதிகள், தங்க கொடிமரம், அன்னதானம் வழங்கும் பகுதி, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதிலும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்
பின்னர் கோவிலின் நான்கு கோபுர நுழைவாயில்கள், பிற பகுதிகள், பக்தர்கள் செல்லக்கூடிய பகுதிகள், செல்போன் வைக்கும் இடம் , கோவிலுக்கு முன்பாக விற்பனை செய்யக்கூடிய தேங்காய் பழ விற்பனை செய்யும் இடம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்
மேலும் பக்தர்கள் காலணிகள் வைக்கும் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் காவல்துறையினர் பலத்த சோதனையில் ஈடுபட்டனர்
3 மணி்நேரமாக நடத்தப்பட்ட சோதனையில் எந்த வெடி பொருட்களும் கண்டறியப்படாத நிலையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த செய்தி புரளி என தெரியவந்தது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள காவல்துறையினருக்கு கூடுதல் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு சோதனையை தீவிர படுத்த வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ