டெல்லியில் குடிநீர் அபாயகரமானது! புற்றுநோய் வரலாம்.. அம்பலப்படுத்திய சிஏஜி அறிக்கை!

Delhi Water CAG Report: மத்திய அரசின் தலைமை தணிக்கையாளர் (CAG) வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கை, டெல்லியின் குடிநீர் தரம் குறித்த மிகவும் கவலையளிக்கும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. டெல்லி முழுவதும் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகளில் 55% தோல்வியடைந்து உள்ளன.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 20, 2026, 07:30 PM IST
  • டெல்லியில் சேகரிக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகளில் 55% குடிப்பதற்குத் தகுதியற்றவை -சிஏஜி (CAG) அறிக்கை
  • 80-90 மில்லியன் கேலன் தண்ணீர் எவ்வித சுத்திகரிப்பும் இன்றி நேரடியாக விநியோகிக்கப்படுகிறது.
  • டெல்லி ஜல் போர்டு ஆய்வகங்களில் போதிய கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை.
டெல்லியில் குடிநீர் அபாயகரமானது! புற்றுநோய் வரலாம்.. அம்பலப்படுத்திய சிஏஜி அறிக்கை!

Delhi Water Quality: சமீபத்தில் இந்தூரில் அசுத்தமான குடிநீரால் உயிரிழப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் குடிநீர் தரம் குறித்த கவலைகள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், நாட்டின் தலைநகரான டெல்லியில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கை வெளியாகியுள்ளது. டெல்லி மக்கள் தற்போது பருகும் நிலத்தடி நீர் குடிக்கத் தகுதியற்றது என்றும், அது புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை உருவாக்கும் அபாயம் கொண்டிருப்பதாகவும் மத்திய அரசின் தலைமை தணிக்கையாளர் (CAG) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Add Zee News as a Preferred Source

டெல்லி மக்களின் உயிருக்கு ஆபத்து?

டெல்லி ஜல் போர்டு (DJB) மூலம் வழங்கப்படும் குடிநீரின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. இந்த தணிக்கையின் மிகவும் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளில் ஒன்று, பரிசோதிக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகளில் பாதிக்கும் மேற்பட்டவை குடிப்பதற்கு தகுதியற்றவை என்பதுதான். CAG அறிக்கை என்பது தேசிய தலைநகரப் பகுதியில் வசிக்கும் மக்களின் பொது சுகாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி உள்ளது. இது பாஜக அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டுகின்றன என சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

சிஏஜி (CAG) அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்ன?

55% நிலத்தடி நீர் குடிப்பதற்கு தகுதியற்றது

CAG அறிக்கையின்படி, டெல்லி முழுவதும் மொத்தம் எடுக்கப்பட்ட 16,234 நிலத்தடி நீர் மாதிரிகளில், 55% மாதிரிகள் (8,933) தரம் குறைந்தவை எனத் தெரியவந்துள்ளது. இவை குடிப்பதற்கு முற்றிலும் தகுதியற்றவை. டெல்லிக்குத் தேவையான குடிநீரில் தற்போது 25% பற்றாக்குறை நிலவுகிறது. டெல்லி ஜல் போர்டு (DJB) ஆய்வகங்களில் போதுமான ஊழியர்களும், நவீன உபகரணங்களும் இல்லை. இதனால் குடிநீர் தரம் சரியாகப் பரிசோதிக்கப்படுவதில்லை. 

சுத்திகரிக்கப்படாத நச்சு நீர்

தண்ணீர் பரிசோதனையானது பி.ஐ.எஸ் (Bureau of Indian Standards - BIS) நிர்ணயித்த தரநிலைகளின்படி நடத்தப்படுவதில்லை என்பது கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கிணறுகளில் இருந்து நாளொன்றுக்கு 80 முதல் 90 மில்லியன் கேலன் தண்ணீர் எவ்வித சுத்திகரிப்பும் இன்றி நேரடியாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு உள்ளது.

தடைசெய்யப்பட்ட இரசாயனங்களின் பயன்பாடு?

தடைசெய்யப்பட்ட புற்றுநோயை உண்டாக்கும் பாலிஎலக்ட்ரோலைட்டுகளை தனியார் நீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி நிலையங்கள் தொடர்ந்து பயன்படுத்ட்ஜ்ஹி வருகிறது. அதாவது அவற்றின் பயன்பாட்டை வெளிப்படையாக தடை செய்திருந்தபோதிலும் இரசாயனங்கள் பயன்படுத்துவதாக தணிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

புற்றுநோயை உண்டாக்கும் நிலத்தடி நீர்?

இந்த அசுத்தமான நீரைப் பருகுவதால் டெல்லி மக்களுக்குக் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என சிஏஜி எச்சரித்துள்ளது. குறிப்பாக புற்றுநோய், தோல் நோய்கள் உட்பட சுகாதார அபாயங்களை ஏற்படுத்துகிறது என்று CAG திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

டெல்லி அரசுக்கு மக்கள் நல அமைப்புகள் விடுத்துள்ள அவசர கோரிக்கை

இந்த விவகாரத்தில் 'ஜன் ஸ்வஸ்திய அபியான் இந்தியா' (JSAI) அமைப்பு தலையிட்டு, டெல்லி அரசு மற்றும் டெல்லி ஜல் போர்டு ஆகியவற்றுக்குக் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

- சுத்திகரிக்கப்படாத நிலத்தடி நீர் விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.

- பி.ஐ.எஸ் (BIS) தரநிலைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

- தண்ணீர் பரிசோதனை ஆய்வகங்களை நவீனப்படுத்தி, போதுமான ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

- ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும்.

- குடிநீர் தரம் குறித்த தரவுகளைப் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது ஒரு அடிப்படை உரிமை, இதை உறுதி செய்வதில் தொடர்ச்சியான அரசின் தோல்வி, பொது நம்பிக்கையையும் பொது சுகாதாரப் பொறுப்பையும் கடுமையாக மீறுவதாகும் என JSAI அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

டெல்லி அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்

தலைநகர் டெல்லியில் நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் வழங்காதது அவர்களின் உயிரோடு விளையாடுவதற்குச் சமம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் படிக்க - பல பெண்களிடம் சில்மிஷம் - ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் - ஆபாச வீடியோவால் பரபரப்பு... முழு பின்னணி!

மேலும் படிக்க - நெய்யை ரயிலில் கொண்டுபோக கட்டுப்பாடு... ரயில்வேயின் இந்த ரூல்ஸ் தெரியுமா?

மேலும் படிக்க - யூடியூப் பார்த்து எடை குறைக்க முயற்சித்த பெண்..பரிதாப பலி! கதறும் தந்தை..நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News