பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு குட் நியூஸ்! மத்திய அரசு கொடுத்துள்ள அரிய வாய்ப்பு!

Central Government : தமிழ்நாட்டில் உள்ள பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு ஒரு அரிய வாய்ப்பை கொடுத்துள்ளது. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jul 26, 2025, 01:51 PM IST
  • தமிழ்நாட்டு மாணவர்களுக்கு குட் நியூஸ்
  • மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
  • சென்னை கிண்டியில் பயிற்சி - விண்ணப்பிக்கவும்
பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு குட் நியூஸ்! மத்திய அரசு கொடுத்துள்ள அரிய வாய்ப்பு!

Central Government, Job Opportunity, Tamilnadu : தமிழ்நாட்டில் உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்காக மத்திய அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்பவர்கள் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பிரம்மாண்டமாக அமைய உள்ள காலணி உற்பத்தி தொழிற்சாலையில் நல்ல சம்பளத்துடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இது தொடர்பான அறிவிப்பை மத்திய காலணி பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். யார் யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம், என்னென்ன தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன, என்ன படிக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

Add Zee News as a Preferred Source

காலணி தொழிற்சாலை

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளிடம் இருந்து வரவேற்கப்படுகிறது. ஏனென்றால், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் உலக தரத்தில் சுமார் ரூ.2 ஆயிரத்து 302 கோடி முதலீட்டில் 20 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பிரம்மாண்டமாக தொழிற்சாலை உருவாகி வருகிறது. இதனை ‘பௌ சென்’ என்கிற காலணி உற்பத்தி நிறுவனம் சார்பில் இந்த புதிய ஆலை கட்டப்பட்டு வருகிறது. அந்த ஆலை விரைவில் செயல்பட உள்ளது.

சென்னை கிண்டியில் பயிற்சி

காலணி தொழிற்சாலை பணியில் சேர்வதற்க்கு இளைஞர்கள் காலணி தயாரிப்பு தொடர்புடைய பாடப்பிரிவு படித்திருக்க வேண்டிய அவசியம். எனவே, இந்த பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி முடிக்க வேண்டியுள்ளது.

கல்வித்தகுதி என்ன?

இந்த நிலையில் இந்த பயிற்சி நிறுவனத்தில் 2025-2026-ம் ஆண்டு சேருவதற்கான தொழிற்கல்வி சேர்க்கை அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதில் சேர விருப்பம் உள்ள இளைஞர்கள் அதற்கான சேர்க்கை விண்ணப்பத்தை கள்ளக்குறிச்சி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக்கொண்டு பயன்பெறலாம். மத்திய அரசின் நீண்டகால மற்றும் குறுகிய கால தொழிற்கல்வி பாடப்பிரிவுகளான காலணி உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் டிப்ளாமோ படிப்புக்கு 2 ஆண்டுகால பயிற்சி பெற வேண்டும். அதற்கு விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காலணி வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு வளர்ச்சியில் மேம்பட்ட சான்றிதழ் 1 ஆண்டுகால பயிற்சிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி காலம்

காலணி உற்பத்தி தொழில்நுட்பத்தில் மேம்பட்ட சான்றிதழ் 1 ஆண்டு கால பயிற்சிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் 6 மாத கால பயிற்சிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், காலணி தொழில்நுட்பத்தில் முதுகலை டிப்பளமோ ஒன்றரை ஆண்டுகால பயிற்சிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், காலணி தொழில்நுட்பத்தில் போஸ்ட் தொழில்நுட்ப பட்டய 1 ஆண்டு கால பயிற்சிக்கு ஏதேனும் ஒரு தொழில்நுட்ப பட்டய தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அனைத்து பாடப்பிரிவுகளுமே ஆங்கில வழி கற்றல் முறையாகும். மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியே விடுதி வசதி உண்டு. இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மாணவ, மாணவியர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். எனவே 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வரும் ஜூலை 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எப்படி விண்ணப்பிப்பது?

மேலும் கூடுதல் விபரங்களுக்கு சேர்க்கை ஒருங்கிணைப்பாளர்கள் திரு.மணிகண்டன் மற்றும் திரு.பாலசுப்ரமணியன் ஆகியோரின் கைப்பேசி எண்கள் 9677943633 மற்றும் 9677943733 என்ற எண்களில் தொடர்புகொண்டு சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம். எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த புதியதாக தொழிற்கல்வி பயில விருப்பம் உள்ளவர்களும், புதிய வேலைவாய்ப்பு தேடுபவர்களும், காலணிகள் தொடர்பான தொழிற்கல்வி கற்று விரைவில் உளுந்தூர்பேட்டையில் செயல்பட உள்ள காலணி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு பெற்று பயனடைய வேண்டுமென தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 குட் நியூஸ்: 4% டிஏ உயர்வு, டிஏ அரியர்

மேலும் படிக்க | விவசாயிகளுக்கு குட் நியூஸ்! ரூ.15,000 மானியம் அறிவிப்பு - உடனே விண்ணப்பிக்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News