Chennai encounter Latest Update : சென்னையில் நேற்று ஒரே நாளில் ஆறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட உத்தரப்பிரதேச கொள்ளையன் நள்ளிரவில் காவல்துறையினரின் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். உயிரிழந்தவரின் பெயர் ஜாபர் குலாம் ஹூசைன் என்பதும் இவர் மீது பல்வேறு மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருப்பதும் காவல்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு தாம்பரத்தில் நடத்த செயின் பறிப்பு சம்பவங்களிலும் இந்த கொள்ளையனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் செயின்பறிப்பு
சென்னையில் நேற்று காலை திருவான்மியூர், இந்திரா நகர் பகுதியில் 54 வயதான பெண்ணிடம் இருந்து 8 சவரன் தங்கச் சங்கலி பறிக்கப்பட்டது. பைக்கில் சென்ற மர்ம நபர்கள் 2 பேர் கொள்ளையடித்துள்ளனர். அடுத்து சாஸ்திரி நகரில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு, அதனை தொடர்ந்து சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட 6 இடங்களில் இந்த செயின்பறிப்பு சம்பவங்கள் நடந்தது.
காவல்துறை அதிரடி விசாரணை
சில மணி நேரங்களில் அடுத்தடுத்து 6 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்ததால் காவல்துறை சென்னை முழுவதும் அனைத்து இடங்களிலும் உஷார்படுத்தப்பட்டது. வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. குறிப்பாக இது வெளிமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறை முன்பே யூகித்துவிட்டதால் விமான நிலையம் மற்றும் ரயில்நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி சென்னை விமானநிலைத்தில் இருந்து ஹைதராபாத் செல்ல இருந்த இருவரை, ஏற்கனவே கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்தனர்.
கொள்ளையன் பின்னணி
அவர்கள் இருவரும் கொள்ளையில் ஈடுபட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதேபோல் கடந்த ஆண்டு தாம்பரத்திலும் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தது. அதில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. அப்போதே இது வெளிமாநில கொள்ளையர்களின் கைவரிசை என்பதை காவல்துறை யூகித்திருந்த நிலையில் இம்முறை உஷாராக செயல்பட்டது. சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விமானம் மூலம் ஹைதாராபாத் சென்று, அங்கிருந்து மும்பை சென்று, பின்னர் உத்தரப்பிரதேசம் செல்ல திட்டமிட்டிருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
உ.பி கொள்ளையன் என்கவுண்டர்
அதில் ஜாபர் குலாம் ஹூசைன் என்பவர் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவர் மீது பல்வேறு மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவர, நேற்று நள்ளிரவில் கொள்ளையடித்த நகைகளை அடையாளம் காண தரமணிக்கு காவல்துறை அழைத்துச் சென்றனர். அப்போது காவல்துறையை தாக்கிவிட்டு ஜாபர் குலாம் ஹூசைன் தப்ப முயன்றபோது என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்துறையின் இந்த நடவடிக்கை கொள்ளையர்கள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | மல்டி பில்லினியரிடம் 25 லட்சம் லஞ்சம் கேட்டதா சென்னை போலீஸ்...? நடந்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ