)
Chennai Latest News: சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவை சேர்ந்தவர் நித்தின்சாய். இவர் மைலாப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதே போல் அயனாவரம் பிவி கோயில் தெருவை சேர்ந்த அபிஷேக் அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
Chennai Latest News: திருமங்கலத்தில் நடந்த விபத்து
நேற்று (ஜூலை 28) இரவு நித்தின்சாய் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் தன் நண்பர்களுடன் சென்னை திருமங்கலம் ஸ்கூல் சாலையில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் பிரியாணி சாப்பிட சென்றுள்ளனர். அப்போது சக நண்பர்களுடன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் நித்தின் சாயும் அபிஷேகம் செல்ல ஆயத்தமாகினர்.
இதனிடையே இவர்களது இருசக்கர வாகனம் பிரியாணி கடையை தாண்டி சென்ற போது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று இவர்கள் மீது மோதி உள்ளது. இதில் அபிஷேக் நித்தின் சாய் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்தனர். உடனே சக நண்பர்கள் அந்த கார் மீது கற்களை கொண்டு வீசியதாக கூறப்பட்டது. இதனால் பயந்து போய் காரில் வந்த நபர்கள் நிற்காமல் தப்பிச் சென்றனர் என்றும் கூறப்பட்டது.
Chennai Latest News: முன் விரோதமா?
பின்னர் சக நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த நித்தின்சாய் மற்றும் அபிஷேக் இருவரை மீட்டு சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் செல்லும் வழியில் நித்தின் சாய் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அபிஷேக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனிடையே முதலில் இந்த வழக்கு விபத்தாக பதியப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்த நித்தின் சாயின் தாயார் எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி நித்தின் சாய், அபிஷேக் ஆகியோர் படித்த கல்லூரியில் வெங்கடேஷ் உள்ளிட்ட ஒரு தரப்பினருக்கும், வேறு ஒரு கல்லூரியை சேர்ந்த பிரணவ் தரப்பினருக்கும் இடையே காதல் விவகாரம் காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் சண்டையிட்டு வந்த நிலையில் உயிரிழந்த நித்தின் சாய் சென்ற இருசக்கர வாகனத்தை பிரணவ் தரப்பு கும்பல் இடித்துள்ளது தெரியவந்தது.
Chennai Latest News: இருவர் கைது
இதில் நித்தின் சாய் தலைக்கவசம் அணியாத நிலையில் பள்ளி சுவற்றின் மீது தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்துள்ளார். அபிஷேக்குக்கு தலை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் பிரணவ் மற்றும் சுதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ