)
Chennai Anna Salai Traffic Diversion From August 17: சென்னை தேனாம்பேட்டையில் மேம்பாலக் கட்டுமானப் பணியை எளிதாக்கும் பொருட்டு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் நாளை மறுதினம் (ஆகஸ்ட் 17) முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை இன்று (ஆகஸ்ட் 15) வெளியிட்ட அறிக்கையில், "மாநில நெடுஞ்சாலைத் துறையினர் மவுண்ட் ரோட்டில் 3.2 கி.மீ., தூரத்திற்கு மேம்பாலம் கட்டி வருகின்றனர். இந்த மேம்பாலக் கட்டுமானப் பணியை எளிதாக்க தேனாம்பேட்டை அருகே, வரும் ஆக.17ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செயல்படுத்தப்பட உள்ளன" என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறை செயல்படுத்தும் போக்குவரத்து மாற்றம் பின் வருமாறு:
- அண்ணாசாலையில் உள்ள சைதாப்பேட்டையில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி தியாகராய சாலை, மா.போ.சி. சந்திப்பு, வடக்கு போக் சாலை (வலதுபுறம் திரும்பி), விஜயராகவ சாலை சந்திப்பு, விஜயராகவ சாலை வழியாக அண்ணாசாலையை அடையலாம்.
- அண்ணா சாலையில் இருந்து தி.நகர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தியாகராய சாலை நோக்கிச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
- தி.நகரில் இருந்து அண்ணா சாலை நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள் தியாகராய சாலையில் உள்ள மா.போ.சி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வடக்கு போக் சாலை, விஜயராகவ சாலை வழியாக சென்று அண்ணா சாலையை அடையலாம்.
- தெற்கு போக் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மா.போ.சி. சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, அவ்வாகனங்கள் நேராக வடக்கு போக் சாலையை நோக்கிச் சென்று பின்னர் விஜயராகவ சாலையை அடைந்து பின்னர் அண்ணா சாலையை அடையலாம்.
- அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் விஜயராகவ சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது.
எனவே, அண்ணா சாலையில் செய்யப்பட்டுள்ள இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களது ஒத்துழைப்பை அளிக்குமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Due to the construction work for a 3.2 km flyover on Mount Road, traffic diversions will be in place near #Teynampet from 17.08.2025 on a trial basis.#ChennaiTraffic #TrafficUpdate pic.twitter.com/WfuHEGKTu0
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) August 15, 2025
Traffic Diversion: தேனாம்பேட்டை டூ சைதாப்பேட்டை புதிய மேம்பாலம்
அண்ணா சாலை என்பது சென்னையின் மிக பரபரப்பான சாலைகளில் ஒன்றாகும். திருவல்லிகேணி முதல் கிண்டி வரை நீண்டிருக்கும் இந்த அண்ணா சாலையில்தான், பல்வேறு முக்கிய பகுதிகளின் பிரதான சாலைகள் இணையும். எனவே, இங்கு போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருக்கும். அண்ணா சாலையில் தற்போது அண்ணா மேம்பாலம் மட்டுமே இருக்கிறது.
இந்நிலையில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிரமப்படாமல் இருக்க அண்ணா சாலையில் இணையும் எல்டாம்ஸ் சாலை தொடங்கி எஸ்ஐஇடி கல்லூரி சாலை, நந்தனம் சந்திப்பு மற்றும் சிஐடி சாலை சந்திப்பு வழியாக சைதாப்பேட்டை பேருந்து நிலையம்வரை உயர்மட்டப் பாலம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு கடந்த 2023ஆம் ஆண்டில் ஒப்புதல் அறிவிக்கப்ட்டது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அமையும் இந்த 4 வழி உயர்மட்ட பாலத்திற்கு ரூ.621 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. தற்போது 30% பணிகள் நிறைவடைந்திருப்பதாக கூறப்படும் நிலையில் வரும் டிசம்பருக்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ