போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும் இந்தியா முழுவதும் போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் அபராதங்களும் அதிகப்படுத்தப்பட்டுள்து. இந்நிலையில் பொதுமக்களிடம் இருந்து அதிகமாக புகார்கள் வந்துள்ள நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஐந்து குறிப்பிட்ட விதிமீறல்களுக்கு மட்டுமே இனி அபராதம் விதிக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். காவல்துறையினர் கும்பலாக நின்று கொண்டு தேவையில்லாமல் அபராதம் விதிப்பதாக குற்றசாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிங்க: தமிழகத்தில் நாளை கனமழை பெய்யும்.. இந்த 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
இனி இந்த 5 காரணங்களுக்கு மட்டுமே அபராதம்
- அதிவேகமாக வாகனம் ஓடினால் அபராதம் விதிக்கப்படும்.
- இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும்.
- ஒன்வேயில் சென்றால் அபராதம் விதிக்கப்படும்.
- குடிபோதையில் வாகனம் ஓடினால் அபராதம் விதிக்கப்படும்.
- இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் சென்றால் அபராதம் விதிக்கப்படும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த விதிமீறல்களுக்கு மட்டுமே இனி அபராதம் விதிக்க வேண்டும் என்று காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் குழுக்களாக நின்று கொண்டு அபராதம் விதிப்பதைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் தங்களது அதிகாரத்தை மக்கள் மீது திணிக்கின்றனர் மற்றும் முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதற்கு பங்களிக்கிறது போன்ற குற்றசாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. வரம்பு மீறி அதிக அபராதங்கள் போடப்படுவதாகவும் சாமானிய மக்கள் தெரிவித்து வந்தனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிக சாலை விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக சென்னையில் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுகிறது.
மேலும் படிங்க: சிவகிரி இரட்டை கொலை: முதியவர்களை மட்டும் குறிவைத்த கொலையாளிகள் - பகீர் தகவல்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ