)
Chennai Marina Beach Latest News: சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை என்பது அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப பல்வேறு நடவடிக்கைகளையும் சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. குறிப்பாக, சுகாதாரமாக இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் பொழுதுப்போக்கு இடங்களை மேம்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக மெரினா கடற்கரையை சர்வதேச தரத்தில் சென்னை மாநகராட்சி மேம்படுத்தி வருகிறது. இதனால், மெரினான கடற்கரையை சுத்தமாக வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி, பொது இடங்கள் மற்றும் கடற்கரைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், உணவுப் பொருள் எச்சங்கள் உள்ளிட்ட எந்தவித கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், சென்னை மெரினாவில் மட்டும் ஒருநாளைக்கு 4 மெட்ரிக் டன் குப்பை அகற்றப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. கடற்கரைக்கு வரும் மக்கள் குப்பைத் தொட்டிகளில் கழிவுகளை போடாமல், ஆங்காங்கே போடுகின்றனர். குறிப்பாக, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் சேருவதாக மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. இதனால், சுகாதார பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரையில் குப்பை கொட்டுபவர்கள் மிது உரிய சட்ட விதிகளின்படி ரூ.5,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது. எனவே, இனி வரும் நாட்களில் மெரினா கடற்கரையில் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். பொங்கல் விடுமுறையில் மெரினா கடற்கரைக்கு செல்பவர்கள் இதனை தெரிந்து வைக்க வேண்டும்.
இதற்கிடையில், மற்றொரு உத்தரவையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் அங்கீகரிக்கப்படாத மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். 2026 ஜனவரி 12 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மரங்களை அகற்றுதல், கிளைகளை கத்தரித்தல், நடவு செய்தல் மற்றும் உலர்ந்த அல்லது ஆபத்தான மரங்களை அகற்றுதல் போன்ற சேவைகளுக்கான விண்ணப்பங்கள் இனி வனத்துறை மூலம் நேரடியாக ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் கூறியுள்ளது.
சென்னை மாநகராட்சி இணையதளம் அல்லது நம்ம சென்னை செயலி மூலம் கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். அனுமதியின்றி கிளைகளை வெட்டுதல், மரங்களில் ஆணிகளை அடித்தல், விளம்பர பலகைகளை பொருத்துதல் அல்லது பொது இடங்களில் மரங்களைச் சுற்றி அலங்கார விளக்குகள் அமைத்தல் ஆகியவற்றுக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. சென்னை மாநகராட்சியின் அடுத்தடுத்த அறிவிப்புகள் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, தற்போது பொங்கல் விடுமுறை வர இருக்கும் நிலையில், பொதுமக்கள் இதனை தெரிந்து கொள்வது அவசியம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ