நாளை முதல் ரூ.5,000 அபராதம்! லைசென்ஸ் வாங்க இன்று கடைசி நாள்.. மாநகராட்சி வார்னிங்!

Chennai Pet License: தலைநகர் சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாதவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. உரிமம் பெற இன்றே கடைசி நாளாக  இருக்கிறது.

Written by - Umabarkavi K | Last Updated : Dec 14, 2025, 11:54 AM IST
  • செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு அலெர்ட்
  • இன்று தான் கடைசி நாள்
  • உடனே லைசென்ஸ் வாங்கிடுங்கள்
நாளை முதல் ரூ.5,000 அபராதம்!  லைசென்ஸ் வாங்க இன்று கடைசி நாள்.. மாநகராட்சி வார்னிங்!

Chennai Pet License: சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும்  சாலையில் நடந்து செல்லும்போது தெருநாய் கடித்து வருகிறது. தெருநாய் கடி சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட, உச்ச நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றது.  தெருநாய்களை அப்புறப்படுத்தப்படுத்த வேண்டும் என்றும் நாய்களுக்கு முறையாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. இதுஒரு பக்கம்  இருக்க, வீட்டில் வளர்க்கப்படும் நாய்களாலும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

Add Zee News as a Preferred Source

செல்லப்பிராணிகளுக்கு இன்றே கடைசி நாள்

இதனால், சென்னை மாநகராட்சி செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்து  இருந்தது. அதாவது, செல்லப்பிராணிகளுக்கு கட்டயாம் உரிமம் பெற வேண்டும் என கூறியிருந்தது. நவம்பர் 24ஆம் தேதிக்குள் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற வேண்டும் என கூறியது. அதன்பிறகு, தேதி தொடர்ந்து இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. இந்தநிலையில், செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற இன்றே (டிசம்பர் 14) கடைசி நாளாகும். எனவே, வீடுகளில் பூனை, நாய் வளர்ப்பவர்கள் இன்றுக்குள் உங்களுக்கு செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற வேண்டும்.

இல்லையெனில், நாளை (டிசம்பர் 15) முதல் ரூ.5,000 அபராதம் சென்னை மாநகராட்சி விதிக்கக்கூடும். அதாவது, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக சென்று சோதனையிட்டு, உரிமம் பெறாத செல்லப்பிராணி உரிமையாளர்களுககு ரூ.5,000 அபராதம் விதிக்க உள்ளதாக தெரிகிறது.  இன்று செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற கடைசி நாளாக இருக்கும் நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று   மட்டும் தான் முகாம்கள் செயல்படும்.

முகாம்கள் விவரம்

மாநகராட்சி சமூதாய நலக்கூடத்தில்  இன்று (டிசம்பர் 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே முகாம் செயல்படும். அதன்படி, தேவராஜன் தெரு, மணலி, சின்ன சேக்காடு,  சண்முகவுதம், சூரப்பட்டு, பாரத்தசாரதி நகர், பழைய வண்ணாரப்பேட்டை, காமராஜபுரம், அம்பத்தூர்,  கும்மாளம்மன் கோயில் தெரு, கீழ்பாக்கம், மாந்தோப்பு, ஆலப்பாக்கம், அம்பேத்கர் நகர், 22வது குறுக்கு தெரு, வேளச்சேரி,  மயிலை பாலாஜி நகர், மடிப்பாக்கம் ஆகிய இடங்களில் செல்லப்பிராணிகளுக்கான முகாம்கள் செயல்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இந்த இடங்களில் செல்லப்பிராணிகள் பதிவு செய்தல், வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி (Anti Rabies Vaccination) செலுத்துதல், மைக்ரோசிப் பொருத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு,  செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற வேண்டும்

உரிமம் பெறுவது எப்படி?

முதலில் சென்னை மாநகராட்சியின் இணையதளத்திற்கு சென்று pet animal license என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்களது செல்லப்பிராணி வகை, உங்களது பெயர், முகவரி, செல்லப்பிராணி புகைப்படம் போன்ற விவரங்களை பதிவேற்ற வேண்டும். இதற்காக ரூ.50 செலுத்த வேண்டும். இந்த செயலுக்கு முன்பாக, செல்லப்பிராணிகளுக்கான தடுப்பூசி, மைக்ரோசிப் பொருத்தம் செய்திருக்க வேண்டும். இவை இரண்டும் செய்தால் மட்டுமே செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கல்லூரி மாணவர்களுக்கு ரூ.20,000 உதவித்தொகை! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News