Chennai Customs Recruitment 2025: இளைஞர்கள், பெண்கள் என பலரும் வேலையில் சேருவதற்கு தீவிரமாக உள்ளனர். பலரும் அரசுப் பணியில் சேருவதற்காக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். அதே நேரத்தில் சிலரும் மற்ற துறைகளில் வேலை பெறுவதற்கு காத்திருக்கின்றனர். இப்படியான சூழலில், சென்னையில் வேலை பார்க்க விரும்புபவர்களுக்கு சூப்பரான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, இந்த பணிக்கு சமைக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி குறித்த விவரம்
சென்னை சுங்கத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சுங்கத்துறை மத்திய வருவாய் மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. சுங்கத்துறை அலுவலகங்கள் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை மத்திய அரசு நிரப்பி வருகிறது. அந்த வகையில், சென்னையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் Halwai Cum Cook, Assistant Halwai Cum Cook ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் இரண்டு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
சென்னையில் சுங்கத்துறை அலுவலகத்தில் Halwai Cum Cook பணிக்கு 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் கேடரிங் துறையில் சான்றிதழ் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அரசு துறையில் இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் திறனை மதிப்பிட skill test வைக்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Assistant Halwai Cum Cook பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும், கேட்டரிங் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சமையல் துறையில் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு Trade skill test வைக்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாத சம்பளம்
Assistant Halwai Cum Cook gபணிக்கு மாத சம்ளமாக ரூ.19,000 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Halwai Cum Cook பணிக்கு மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரு.69,100 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் பிஎஃப், மருத்துவ வசதி, டிஏ போன்ற கூடுதல் நலன்களும் இருக்கிறது.
வயது விவரம்
மேற்கண்ட இரண்டு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பிலும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, முன்னாள் ராணுவத்தினருக்கு 3 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை
மேற்கண்ட இரண்டு பணியிடங்களுக்கும் எழுத்துத் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு skill test நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் chennaicustoms.gov.in என்ற இணையதளத்தில் இருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, உரிய முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப படிவத்துடன் 4 பாஸ்போர் புகைப்படங்கள், 2 selg addressed Unstamped envelops, கல்வி சான்றிதழ்கள், வயது ஆதாரம், சமூக சான்றிதழ், அனுபவ சான்றிதழ் போன்றவற்றை விண்ணப்ப படிவத்துடன் உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த விண்ணப்ப படிவத்தை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். The Additional Commissioner Of Customs Office Of The Commissioner Customs (General) Custom House, No.60, Rajaji Salai, Chennai - 600001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பெண்களுக்கு குட் நியூஸ்! ரூ.20 லட்சம் கடன் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









