சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

Chennai jobs : சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jan 14, 2026, 08:20 PM IST
  • சென்னையில் கோயிலில் வேலைவாய்ப்பு
  • ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் வேலை
  • தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்
சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

Chennai jobs : ஆன்மீகப் பணியில் ஈடுபட ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு பொற்கால வாய்ப்பு! தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி அரசுப் பணியில் சேரலாம்.

Add Zee News as a Preferred Source

இந்த வேலைவாய்ப்பு குறித்த பதவி வாரியான ஊதியம், கல்வித்தகுதி மற்றும் நிபந்தனைகளை இங்கே விரிவாகக் காணலாம்:

பணியிடங்கள், ஊதியம் மற்றும் தகுதிகள்:

சரக்கரை காப்பாளர் (1 பணியிடம்):

ஊதியம்: மாதம் ரூ.13,200 - ரூ.41,800 (Pay matrix-14).

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

உதவியாளர் (1 பணியிடம்):

ஊதியம்: மாதம் ரூ.12,600 - ரூ.39,900 (Pay matrix-13).

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி.

இரவு காவலர் (1 பணியிடம்):

ஊதியம்: மாதம் ரூ.11,600 - ரூ.36,800 (Pay matrix-12).

கல்வித்தகுதி: தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

தோட்ட பராமரிப்பாளர் (1 பணியிடம்):

ஊதியம்: மாதம் ரூ.11,600 - ரூ.36,800 (Pay matrix-12).

கல்வித்தகுதி: தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

துப்புரவாளர் (1 பணியிடம்):

ஊதியம்: மாதம் ரூ.11,600 - ரூ.36,800 (Pay matrix-12).

கல்வித்தகுதி: தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

ஓதுவார் (1 பணியிடம்):

ஊதியம்: மாதம் ரூ.12,600 - ரூ.39,900 (Pay matrix-13).

கல்வித்தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிவதுடன், தேவாரப் பள்ளியில் 3 ஆண்டு காலப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

மடைப்பள்ளி (1 பணியிடம்):

ஊதியம்: மாதம் ரூ.13,200 - ரூ.41,800 (Pay matrix-14).

தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கோயிலின் நடைமுறைப்படி நைவேத்தியம், பிரசாதம் தயாரிக்கவும், பூஜை சடங்குகளை அறிந்திருக்கவும் வேண்டும்.

ஸ்ரீபாதம் தாங்கி (1 பணியிடம்):

ஊதியம்: மாதம் ரூ.10,000 - ரூ.31,500 (Pay matrix-10).

தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிவதுடன், 2 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

முக்கிய நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை:

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் அவசியம்.

விண்ணப்பம் பெறுதல்: hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கோயில் அலுவலகத்தில் நேரில் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.

யாரெல்லாம் தகுதியற்றவர்கள்?: நீதிமன்றத் தண்டனை பெற்றவர்கள், கடனைத் தீர்க்க முடியாதவர்கள், அரசு அல்லது கோயில் பணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் கோயிலுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

தேவையான ஆவணங்கள்: கல்விச் சான்றிதழ் நகல்கள், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, முன்னுரிமைச் சான்றிதழ் மற்றும் மருத்துவச் சான்று நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

தபால் கட்டணம்: சென்னை மாவட்டத்தினர் ரூ.50-க்கான தபால் தலையும், மற்ற மாவட்டத்தினர் ரூ.75-க்கான தபால் தலையும் ஒட்டிய உறையை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

கடைசி தேதி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 27.01.2026 மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். அதற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் (Registered Post) ஒப்புதல் அட்டையுடன் மட்டுமே அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: செயல் அலுவலர், சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், எண்.315, தங்கசாலை தெரு, சென்னை - 600003.

மேலும் படிக்க | 8 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்களுக்கு அரசு வேலை! தேர்வு இல்லை - சூப்பர் சான்ஸ்

மேலும் படிக்க | அரசு வேலைவாய்ப்பு : தேர்வு இல்லை, மாதம் ரூ.21 ஆயிரம் சம்பளம் - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News