)
Tamil Nadu Government : சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் தொடர்பான பகுதி நேர பயிற்சி (PART TIME COURSE) அக்டோபர் 2025 மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது நேரடியாக பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி தங்கத்தின் தரமறிய, தங்கத்தின் இன்றைய நவீன தொழில் நுட்பம், நகைக்கடன் வட்டி கணக்கிடுதல், KDM மற்றும் HALL MARK பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ளலாம், இப்பயிற்சிக்கான உபகரணங்கள் பயிற்சி நிலையத்தின் மூலமே பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும்.
இப்பயிற்சி முடித்தவர்களுக்கு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழை வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம் பயிற்சி முடித்தவர்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தங்க நகை மதிப்பீட்டாளராக பணிபுரிய வாய்ப்பு உள்ளது.
இப்பயிற்சிக்கான கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் பயிற்சி பெறலாம். வயது வரம்பு ஏதும் இல்லை. வாரத்திற்கு 2 நாட்கள் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) மட்டும் பயிற்சி நடைபெறும். பயிற்சிக் கட்டணம் ரூ. 4550/- மட்டுமே (உபகரணங்கள் உட்பட) பயிற்சி முடித்து தேர்ச்சிக்குப் பின்னர் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய சான்றிதழ் வழங்கப்படும் பயிற்சிக்கான விண்ணப்பம் 22.09.2025 முதல் 14.10.2025 (விடுமுறை நாட்கள் நீங்கலாக) வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ. 100/- (GST கட்டணம் நீங்கலாக) ஆகும்.
மேலும் விபரங்களுக்கு சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம் எண். 215 பிரகாசம் சாலை பிராட்வே சென்னை-1. என்ற முகவரியிலோ அல்லது தொலைபேசி எண் 044-25360041 மற்றும் 9444470013 மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
தாட்கோ அறிவிப்பு
தாட்கோ சார்பாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற அரசு இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் மூலமாக எளிய முறையில் விண்ணப்பம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முதலமைச்சரின் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் சமூக பொருளதார மேம்பாட்டிற்காக தொழில் முனைவுத் திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் மற்றும் PM-AJAY போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் தங்கள் இணையதளம் மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றார்கள். இதை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக அந்தந்த பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அவர்கள் அருகாமையில் இருக்கும் இ-சேவை மையத்தில் வாயிலாக தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் CM-ARISE, PM-AJAY மற்றும் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தில் மனு செய்ய ஆவணம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
அகில இந்திய தொழிற் தேர்வில் தனி தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியுள்ளார். 2026-ஆம் ஆண்டு ஜீலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின்கீழ் DGT ல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்துகொள்ள தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தேர்வுக்கட்டணம் (ரூ.200/- ரூபாய் இருநூறு மட்டும்) செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய (Nodal Govt. ITI ) முதல்வரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் (Theory) தேர்வு 04.11.2025 அன்றும் மற்றும் செய்முறை (Practical) தேர்வு 05.11.2025 ஆகிய தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற
இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தனித் தேர்வராக தேர்வு எழுத 22.09.2025 முதல் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வராக விண்ணப்பிக்க கடைசி தேதி 08.10.2025.அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ