சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதைக் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் தான் டெங்கு காய்ச்சல் பரவ முக்கியக் காரணம் என்று நீதிபதிகள் கூறியதோடு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதைக்கட்டுப்படுத்த தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. டெங்கு காய்ச்சலைக் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதனை கட்டுப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்து பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் தொடுத்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி சேஷசாயி அமர்வு, மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல், போராட்டத்தில் ஈடுபட்டது சரியான செயலா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மேலும் தமிழகம் முழுவதும் குப்பைகள் குவிந்து இருப்பதால் தான் நோய்கள் பரவுகின்றன. டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.