ஐந்தாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை! பள்ளி ஊழியர் கைது..

5th Standard Student Harassed : பள்ளியின் கழிவறைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த காலை உணவு திட்ட ஊழியர் கைது

Written by - Tamil Arasan | Edited by - Yuvashree | Last Updated : Nov 15, 2025, 07:15 PM IST
ஐந்தாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை! பள்ளி ஊழியர் கைது..

5th Standard Student Harassed : சென்னை கொளத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை நடந்துள்ள சம்பவம், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add Zee News as a Preferred Source

சிறுமிக்கு பாலியல் தொல்லை:

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பியம் பகுதியில் உள்ள காமராஜர் நகர் மாநகராட்சி பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார் நேற்று காலை பள்ளிக்கு மாண மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

அந்த உணவை வியாசர்பாடி சேர்ந்த குணசேகர் என்பவர் கொண்டு வந்து மாணவிகளுக்கு வழங்கியுள்ளார். அப்போது உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவியை பள்ளியின் கழிவறைக்கு குணசேகரன் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அந்த மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மாலை வீட்டுக்கு சென்ற மாணவி தனது பெற்றோரிடம் நடந்துவற்றை கூறியுள்ளார் பாலியல் தொல்லை கொடுத்த குணசேகரன் மீது செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

அதனையடுத்து குணசேகரன் போக்குவரத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வர் பகுதியில் தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது மாநகராட்சி பள்ளியில் படித்த ஐந்தாம் வகுப்பு மாண மாணவிக்கு பாலியல் தொல்லைக்கு கொடுத்த சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | இராஜேந்திர பாலாஜியை அழைத்து EPS திட்டி இருக்க வேண்டாமா...? - செல்வப்பெருந்தகை

மேலும் படிக்க | "உங்கள் வாக்குரிமை பறிபோகலாம்!" - விஜய் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News