Chennai Latest News: சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் குடிநீர், கழிவுநீர், மின்சாரம், குப்பை கழிவு போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்து சிறப்பு மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் இன்று (மார்ச் 2) நடைபெற்றது.
Chennai Latest News: வீடுகளுக்கு தனித்தனியே குடிநீர் தொட்டிகள்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகளும் பொதுமக்களும் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கண்ணகி நகர் பகுதியில் குடிநீர் பிரச்சனை, மின்சார பிரச்சனை உள்ளிட்டவைகளை குறைகளாக அப்பகுதி மக்கள் கூறினர். பிரச்சனைகளை கேட்ட அமைச்சர், "ஒவ்வொரு வீடுகளுக்கும் தனித்தனியே குடிநீர் தொட்டிகள் அமைத்து தரப்படும். கண்ணகி நகரில் பாதுகாப்புகளுக்காக ஆங்காங்கே சிசிடிவி கேமிராக்கள் அமைக்கும் பணியும் நடைபெறும். கண்ணகி நகரில் அனைத்து பகுதிகளிலும் துறை சார்ந்த அதிகாரிகளின் எண்கள் போர்டு வைக்கப்படும்" என்றார்.
Chennai Latest News: கண்ணகி நகருக்கு வந்த முதல் முதலமைச்சர், ஸ்டாலின்தான்
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கண்ணகி நகர் பகுதியில் 24 ஆயிரம் குடியிருப்புகள் இருக்கின்றன. இதுவரை எந்த முதலமைச்சரும் கண்ணகி நகர் பகுதிக்கு வந்ததில்லை. மக்களை சந்தித்ததும் இல்லை. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும்தான் கண்ணகி நகர் பகுதிக்கு அடிக்கடி வந்துள்ளார்.
கரோனா காலகட்டங்களில் தடுப்பூசி போடும் திட்டத்திற்கு கண்ணகி நகர், எழில் நகர், சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகை தந்த முதலமைச்சரிடம் கண்ணகி நகர் பகுதி மக்கள் குடிநீர் பிரச்சனை குறித்து கோரிக்கை வைத்தனர். மறுநாளே கண்ணகி நகர் பகுதிக்கு குடிநீர் திட்டத்தை தொடங்கி, இரண்டு மாதங்களில் குடிநீர் பிரச்சனையை முடித்து வைத்தார்.
Chennai Latest News: கண்ணகி நகர் குடிநீர் பிரச்னையை தீர்க்க...
69 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒவ்வொரு வீட்டிற்கும் 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 38 லட்சம் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி, குழாய்கள் அமைப்பது 23% பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. மீதமுள்ள 77% பணிகள் ஜூலை இறுதிக்குள் நடைபெற்று முடியும். 22 ஆயிரம் குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் அமையும்.
சுனாமி நகர் பகுதி மக்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் ஐந்து + ஐந்து லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்ட நிலையில், ஆங்காங்கே குழாய்கள் சேதமடைந்தும், குடிநீர் தொட்டிகள் சேதமடைந்தும் இருப்பதால் பொதுமக்களுக்கு போதிய அளவில் குடிநீர் இல்லாததால் தினமும் 2 லட்சம் குடிநீர் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.
மொத்தமாக ஒரு நாளைக்கு 12 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் போதவில்லை என்றால் கூடுதலாக லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும். கண்ணகி நகர் பகுதிகளில் நாளை முதல் அதிகாரிகள் சேதமடைந்த கட்டடங்களை ஆய்வு செய்து அதை கணக்கீடு செய்த பின் எந்த மாதிரியான சீரமைப்பு பணிகள் நடைபெற வேண்டுமென அமைச்சரின் உத்தரவு பெற்று பணிகள் நடைபெறும்.
Chennai Latest News: கண்ணககி நகரில் மருத்துவர் பற்றாக்குறை
சென்னை மாநகராட்சி பொருத்தவரை குப்பை எடுத்தல், சாலை சீரமைத்தல் உள்ளிட்ட 212 திட்டப்பகுதிகளில் ஒருங்கிணைத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 212 திட்டப்பகுதிகளிலும் வண்ணம் பூசும் பணியானது வெகு சீக்கிரத்தில் நடைபெறும்" என்றார்.
கண்ணகி நகரில் மருத்துவர் பற்றாக்குறை குறித்த கேள்விக்கு?, "நகர்ப்புற நல்வாழ்வு மையம் சார்பில் மருத்துவர்கள் நிரப்பும் பணியானது ஒரு மாதத்திற்குள் பற்றாக்குறையை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஆணையர் ஈடுபட்டுள்ளார்" என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளித்தார்.
Chennai Latest News: நோயாளிகளை தொட்டு சிகிச்சை அளிக்க மறுப்பா?
கண்ணகி நகர் மருத்துவமனையில் நோயாளிகளை தொட்டு சிகிச்சை அளிப்பதில்லை என குற்றச்சாட்டு இருக்கிறது என்ற கேள்விக்கு?, "அந்த மாதிரியான புகார்கள் இருந்தால் நேரடியாக வந்து சொன்னால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும் படிக்க | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்....!
மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட்டில் வெளியாகப்போகும் குட் நியூஸ்! ரூ.1000 உறுதி மக்களே
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்பு பெறுவது எப்படி? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









