Bomb Threat For Vijay House: சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக அக். 9ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1:50 மணியளவில் காவல் கட்டுபாட்டு அறைக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது.
காலை வரை காத்திருந்த வெடிகுண்டு நிபுணர்கள்
தகவல் அறிந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் அதிகாலை 4:30 மணிக்கு விஜய் வீட்டிற்குச் சென்றுள்ளனர். ஆனால் விஜய் காலை 7 மணிக்கு தான் தூங்கி எழுந்திருப்பார் என்று கூறிய வீட்டு காவலாளிகள், விஜய் எழுந்தவுடன் கேட்டுவிட்டு சொல்கிறோம் என்று கூறியதால் 7:05 மணி வரை விஜய் வீட்டின் வெளியே வெடிகுண்டு நிபுணர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
7:05 மணிக்கு விஜய் வீட்டின் உள்ளே சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையை முடித்துக் கொண்டு வெளியே வந்தனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் வழக்கம்போல் புரளி என தெரியவந்து என கூறினார். கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, இதுவரை இரண்டு முறை விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகம் மற்றும் காவல் கட்டுபாட்டு அறைக்கு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்.28ம் தேதி மற்றும் நேற்று நள்ளிரவு என 11 நாட்களுக்குள் இரண்டு முறை விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.
மிரட்டல் விடுத்தவர் கைது
தொடர்ந்து செல்போன் சிக்னலை வைத்து விசாரணை மேற்கொண்ட போது சென்னை மீனம்பாக்கம் உள்ள தனியார் கல்லூரியில் கேண்டீனில் மாஸ்டராக வேலை செய்து வரும் சபீக் என்பவர்தான் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்திருக்கிறார் என தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரட்டலுக்கு காரணம் என்ன?
சபீக் அளவுக்கு அதிகமான மது அருந்தி விட்டு போதையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த போது, கரூர் பற்றிய ரீல்ஸ் வந்திருக்கிறது. அதில், விஜய் 41 பேரை சாவடித்துவிட்டு விஜய் வீட்டில் அமர்ந்து இருப்பதாகவும், அதேபோல் அடுத்த வாரம் தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விஜய் வர உள்ளதால் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசாரின் வாக்குமூலத்தில் சபீக் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை கரூர் செல்லும் விஜய்?
கடந்த செப். 27ஆம் தேதி அன்று விஜய், கரூரில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பின்போது ஏற்பபட்ட கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, விஜய் கரூருக்குச் செல்ல இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. தொடர்ந்து, அவர் காவல்துறையிடம் கரூர் செல்ல அனுமதி கேட்டிருப்பதாகவும், வரும் திங்கட்கிழமை (அக். 13) அன்று அவர் கரூர் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. கரூருக்குச் சென்று உயிரிழந்தவர்களின்
குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரணம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிகழ்வு தனியார் மண்டபத்தில் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான இடத்தை தவெகவினர் தற்போது தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுக்கு ரூ.5000 பொங்கல் பரிசு! யார் யாருக்கு கிடைக்கும்? முக்கிய தகவல்!
மேலும் படிக்க | ஜி.டி. நாயுடு பெயர் சர்ச்சை: ஆலோசிக்கும் அரசு... கோவை பாலத்திற்கு பெயர் மாற்றமா?
மேலும் படிக்க | நாளை வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









