3 நாட்களுக்கு மழை இருக்கு.. சென்னையில் எப்படி? வானிலை மையம் எச்சரிக்கை!

Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.   

Written by - R Balaji | Last Updated : Jan 19, 2026, 03:03 PM IST
  • தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை
  • வானிலை மையம் அறிவிப்பு
  • முழு விவரம்
3 நாட்களுக்கு மழை இருக்கு.. சென்னையில் எப்படி? வானிலை மையம் எச்சரிக்கை!

Rain Alert: இந்த ஆண்டு தொடங்கியது முதல் தமிழகத்தில் மழை பெய்யவும் ஆரம்பித்தது. குறிப்பாக டெஸ்ட் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

Chennai Meteorological Department: சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட் 

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று (19-01-2026) விலகியது.

ஜனவரி 22 வரை வெயில்தான்

இன்று (ஜனவரி 19) முதல் நாளை மறுநாள் ஜனவரி 21) வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

22-01-2026 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

Rain for three days: மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு 

23-01-2026 முதல் 25-01-2026 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதல்: 19-01-2026 முதல் 21-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.

இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 19-01-2026 முதல் 21-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

உறைபனி எச்சரிக்கை:

19-01-2026 மற்றும் 20-01-2026: தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

Chennai Weather Update: சென்னை மற்றும் புறநகர் வானிலை 

இன்று (19-01-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (20-01-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Shutdown: மக்களே அலெர்ட்! நாளை செவ்வாய்க்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!

மேலும் படிக்க: குடித்துவிட்டு ஆடும் நடிகர்கள்... 'அரசியலில் என்ன செய்யப்போகிறார்கள்' - விஜய் மீது அதிமுக அட்டாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News