Chennai Metro Latest News Updates: சென்னை மெட்ரோவின் 2-ம் கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரு மிக முக்கியமான மாற்றத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது கையில் எடுத்துள்ளது.
Chennai Metro: சென்னை மெட்ரோவின் புதிய பிளான்
தற்போது அண்ணா சாலைக்கோ அல்லது கோயம்பேடுக்கோ நீங்கள் செல்ல வேண்டும் என்றால் பல இடங்களில் மாறி மாறி செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால், இனி அந்த கவலை இருக்காது என கூறப்படுகிறது. ஆலந்தூர் மெட்ரோ நிலையம், சென்னை நகரின் முக்கிய முக்கிய போக்குவரத்து மையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அது எப்படி? என்ன மாற்றம் செய்ய இருக்கிறார்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.
Chennai Metro: 5வது வழத்தடத்தில் முக்கிய மாற்றம்
சென்னை மெட்ரோவில் தற்போது 2 வழித்தடங்கள் உள்ளன. 2ஆம் கட்டப் பணிகளில் மொத்தம் 3 வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 5வது வழித்தடம் (Corridor 5) என்பது மாதவரத்தில் தொடங்கி கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரை திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெளியாகி உள்ள புதிய தகவலின்படி, இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் சோழிங்கநல்லூரோடு நிற்காமல், அங்கிருந்து அப்படியே ஆலந்தூர் வரை நீட்டிக்கப்பட உள்ளது.
Chennai Metro: இதனால் யாருக்கு பயன்?
அதாவது, மாதவரம், கோயம்பேடு, விருகம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பயணிகள், இனி சோழிங்கநல்லூர் சென்று இறங்க வேண்டிய அவசியமில்லை. நேராக ஆலந்தூர் வரை ஒரே ரயிலில் பயணிக்கலாம். இந்த மாற்றத்தால் யாருக்கெல்லாம் மிகப்பெரிய நன்மை என்பதை இங்கு காணலாம்.
குறிப்பாக மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நன்மையாகும். ஏனென்றால், இந்த பகுதிகளில் மெட்ரோ வந்தாலும், இவர்கள் கிண்டி, சைதாப்பேட்டை அல்லது ஏர்போர்ட் செல்ல வேண்டுமெனில், முன்பு திட்டமிட்டபடி ரயிலை மாற வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், இப்போது காரிடார் 5 ஆலந்தூர் வரை நீட்டிக்கப்படுவதால், இந்த பகுதி மக்கள் நேரடியாக ஆலந்தூர் வந்து, அங்கிருந்து ஒரே நிமிடத்தில் விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயிலிலோ அல்லது அண்ணா சாலை செல்லும் ரயிலிலோ மாறிவிடலாம். இதனால், பயண நேரம் பாதியாகக் குறையும்.
Chennai Metro: ஆலந்தூரே மாறப்போகுது!
ஏற்கனவே பச்சை வழித்தடம் (சென்னை சென்ட்ரல் டூ பரங்கிமலை) மற்றும் நீல வழித்தடம் (விம்கோ நகர் டூ விமான நிலையம்) என இரண்டு வழித்தடங்கள் சந்திக்கும் இரண்டு இடங்களில் ஒன்றாக ஆலந்தூர் மெட்ரோ நிலையம் உள்ளது. இதனால் எப்போதும் ஆலந்தூரில் பயணிகள், கூட்டம் என பரபரப்பாக இருக்கும். இப்போது இரண்டாம் கட்டப் பணிகளில் 5ஆம் வழித்தடம் இங்கே வந்து இணைவதால், ஒரே இடத்தில் மூன்று மெட்ரோ வழித்தடங்கள் சந்திக்கும் சென்னையின் முதல் மற்றும் ஒரே மெட்ரோ நிலையமாக ஆலந்தூர் மாறிவிடும்.
மாதவரத்தில் இருந்து வரும் ரயில்கள், போரூர், ராமாபுரம் வழியாக வந்து, மடிப்பாக்கம் வழியே ஆலந்தூரில் முடிவடையும் வகையில் இந்தத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது செயல்பாட்டுக்கு வரும்போது, பழைய மகாபலிபுரம் சாலை (OMR) மற்றும் ஐடி காரிடாரில் வேலை செய்பவர்களுக்கும் சரி, வட சென்னையில் இருந்து தென் சென்னை வருபவர்களுக்கும் சரி மெட்ரோ பயணம் மிக எளிதாகிவிடும்.
மேலும் படிக்க | சென்னை மெட்ரோ ரயில்: பொங்கல் நேரத்தில் வெளியான அறிவிப்பு... அலர்ட் பயணிகளே!
மேலும் படிக்க | வடபழனி - போரூர் மெட்ரோ ரயில் சேவை எப்போது? வெளியான சூப்பர் அப்டேட்!
மேலும் படிக்க | போரூர் - பூந்தமல்லி மெட்ரோ! வந்தது கிரீன் சிக்னல்.. சென்னை வாசிகளுக்கு செம்ம அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









