சென்னை மெட்ரோ சைலண்டாக செய்த பெரிய சம்பவம்... நாட்டில் இதுவே முதல்முறை!

Chennai Metro Rail: இந்திய மெட்ரோ கட்டுமானத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொறியியல் சாதனை செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெரிவித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 2, 2025, 10:13 PM IST
  • சென்னையில் தற்போது 2 வழித்தடங்கள் செயல்பாட்டில் உள்ளன.
  • மேலும் 3 வழித்தடங்கள் கட்டப்பட்டு வருகின்றனய
  • இந்த 3 வழித்தடங்கள் 118.9 கி.மீ நீளத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ சைலண்டாக செய்த பெரிய சம்பவம்... நாட்டில் இதுவே முதல்முறை!

Chennai Metro Rail Latest News Updates: இந்திய மெட்ரோ கட்டுமானத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொறியியல் சாதனை செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டத்தில் இந்தியாவின் முதல் 33.33 மீ நீளமுள்ள U-கிர்டர் வழித்தடம் 5-இல் நிறுவப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளளது. 

Add Zee News as a Preferred Source

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் அதன் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் போட்ட இன்றைய (ஜூன் 3) பதிவில், "சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் இரண்டில் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Chennai Metro Rail: இந்தியாவில் இதுவே முதல் முறை...

இந்தியாவின் முதல் 33.33 மீ நீளமுள்ள U-கர்டர் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில், 5வது வழித்தடத்தில் ராமாபுரத்தில் நிறுவப்பட்டது. இது இந்திய மெட்ரோ கட்டுமானத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பொறியியல் சாதனை ஆகும். அதுமட்டுமின்றி, இந்திய உள்கட்டமைப்பில் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள், AEON மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர் L&T உடன் இணைந்து நாட்டின் முதல் 33.33 மீட்டர் நீளமுள்ள U-கர்டரை வெற்றிகரமாக நிறுவியது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இந்த மைல்கல் பொறியியல் சாதனை, இந்திய மெட்ரோ ரயில் திட்டங்களின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

225 மெட்ரிக் டன் எடையுடன் உருவாக்கப்பட்ட இந்த U-கர்டர், ஒரு முக்கியமான பொறியியல் சாதனையாகவும் மற்றும் கட்டுமான குழுவின் தொழில்நுட்ப திறன், புதுமை மற்றும் செயல்படுத்தும் திறன்களுக்கு ஒரு முக்கிய சான்றாகவும் உள்ளது.

Chennai Metro Rail: இது ஏன் ரொம்ப முக்கியம்?

பொதுவாக போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் U-டர்ன் பகுதிகளில், எதிர்கால போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு நீளமான ஸ்டீல் கர்டரை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், L&T தலைமை அலுவலகம் முன்பு அமைந்துள்ள இந்த இடத்தில், ஸ்டீலுக்கு பதிலாக நீளமான U-கர்டரை பயன்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், இந்திய மெட்ரோக்களில் இதுவே மிகவும் நீளமான U-கர்டர் ஆகும். மேலும், இது அழகியல் ரீதியாகவும்  சிறப்பாக அமைந்துள்ளது.

Chennai Metro Rail: முக்கிய சவால்கள் என்னென்ன?

இந்த முயற்சியின் முக்கிய சவால்கள் U-கர்டர்க்காண அச்சுகள் வடிவமைப்பது, அவை பாதுகாப்பாக கொண்டு செல்வது மற்றும் துல்லியமாக நிறுவுவது ஆகியவையாகும். இந்தப் பணி மூன்று ஸ்பான்களில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது, ஒவ்வொரு ஸ்பானிலும் இரண்டு கர்டர்கள் நிறுவப்பட்டன. மொத்தமாக 33.33 மீட்டர் நீளமுள்ள 6 U-கர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் செயல்திறன், வடிவமைப்பு மற்றும் சிறப்பையும் வெளிப்படுத்துகிறது.

Chennai Metro Rail: U-கர்டர் உருவாக்கம் முதல் நிறுவுதல் வரை

இந்த U-கர்டர்கள் உருவாக்கும் செயல்முறை சிக்கலான கம்பி கட்டமைப்பு (reinforcement), முன் இழுவை முறை (pre-tensioning), மற்றும் மிக உயர்ந்த தரக் கட்டுப்பாட்டு நிலைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த  கர்டர்கள் காஸ்டிங் யார்டில் இருந்து, நிறுவும் இடத்துக்குக் கொண்டு செல்லும் பணிக்கு, மிகச் சீரான திட்டமிடல் மற்றும்  ஒருங்கிணைப்பு தேவைப்பட்டது. இந்த U-கர்டர், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 6+6 அச்சுகளைக் கொண்ட மல்டி-ஆக்சில்டி ரெய்லர்களை பயன்படுத்தி, Volvo FH 520 HP வாகனம் மூலம்  இடமாற்றப்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | யார் அந்த SIR புரளிக்கு Full Stop! ஞானசேகரனின் மொபைலே முக்கிய சாட்சி - என்ன மேட்டர்?

மேலும் படிக்க | மழைக்கு குட் பாய்.. இனி வெயில் கொளுத்த போகுது.. வானிலை மையம் எச்சரிக்கை!

மேலும் படிக்க | தமிழக அரசின் இலவச பயிற்சிகள்... படித்தால் வேலைவாய்ப்பு உறுதி - விண்ணப்பிப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News