Chennai Corporation Extends Deadline Of Pet License: நாடு முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. நாய்க்கடியால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், சில ரேபிஸ் நோயால் உயிரிழந்து வருகின்றனர். இதனால், தெருநாய்களை முறையாக அப்புறப்படுத்தவும், அவர்களுக்கு ரேபிஎஸ் தடுப்பூசி போடுவதையும் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை இருந்து வருகிறது. அதே நேரத்தில், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களாலும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.
செல்லப்பிராணி வைத்திருப்பவர்களுக்கு அலெர்ட்
வீட்டில் வளர்க்கப்படும் ஆக்ரோஷமான நாய்களும் மக்களை கடித்து வருகிறது. இதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அண்மையில் கூட சென்னையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை, வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்து குதறியது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில், வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள், பூனைகளுக்கு முறையாக உரிமம் பெற்றிருக்க வேண்டும். இல்லையில் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகாட்சி தெரிவித்தது.
ஏற்கனவே, இந்த விதிமுறை அமலில் இருந்த நிலையில், அதனை தற்போது கட்டாயப்படுத்தி ரூ.5,000 விதிக்கப்படும் என தெரிவித்தது. இதற்கு முதலில் நவம்பர் 24ஆம் தேதி வரை கால அவகாசம் இருந்த நிலையில், அதனை டிசம்பர் 4ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்காக அவகாசத்தை தற்போது நீடித்துள்ளது.
டிசம்பர் 14ஆம் தேதி வரை காலக்கெடு
அதாவது, டிசம்பர் 14ஆம் தேதிக்குள் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சமீபத்தில் பெய்த மழைக்குப் பிறகு, சென்னை மாநகராட்சி செல்லப்பிராணி உரிமங்களைப் பெறுவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 14 வரை நீட்டித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 91,711 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 45,916 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
செல்லப்பிராணி உரிமையாளர்கள், திருவிக நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணமபேட்டை மற்றும் மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆறு செல்லப்பிராணி மருத்துவமனைகள் மற்றும் சோழிங்கநல்லூரில் உள்ள விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையத்தில், ரேபிஸ் தடுப்பூசி மற்றும் மைக்ரோசிப்பிங் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இவை இரண்டும் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவது கட்டாயமாகும்.
செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது எப்படி?
செல்லப்பிராணி உரிமம் பெறுவதற்கு சென்னை மாநகாட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு pet license என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களது செல்லப்பிராணி எந்த வகையை சேர்ந்தது என்பது தேர்வு செய்தும், அதனின் விவரங்கள், தங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்காக ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த செயலுக்கு முன்பாக செல்லப்பிராணிகளுக்கான ரேபிஸ் தடுப்பூசி மற்றும் மைக்ரோசிப் பொருத்தி இருக்க வேண்டும். இவை இரண்டும் செய்தால் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெற முடியும். செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் படிக்க: எழும்பூரில் ரயில்கள் நிற்காது! ரயில்வே சேவையில் முக்கிய மாற்றம்.. வெளியான அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









