4.95 கிலோ கருப்பை கட்டி ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்! தனியார் மருத்துவமனை சாதனை

47 வயதுப் பெண்மணி ஒருவரது உடலில் இருந்த 4.95 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான கருப்பை நார்த்திசுக் கட்டி (Fibroid) ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 15, 2025, 07:16 PM IST
  • கருப்பை நார்த்திசுக் கட்டி (Fibroid) ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றம்.
  • டா வின்சி XI ரோபோடிக் அறுவை சிகிச்சை.
  • அறுவை சிகிச்சைக்கு அடுத்த நாளே டிஸ்சார்ஜ்.
4.95 கிலோ கருப்பை கட்டி ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்! தனியார் மருத்துவமனை சாதனை

சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், 47 வயதுப் பெண்மணி ஒருவரது உடலில் இருந்த 4.95 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான கருப்பை நார்த்திசுக் கட்டி (Fibroid) ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

டா வின்சி XI ரோபோடிக் அறுவை சிகிச்சை 

36 வார கர்ப்ப கால அளவை ஒப்பிடக்கூடிய மிகப் பெரிய கட்டியை, மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவு இயக்குனர் டாக்டர் பத்மப்ரியா விவேக் தலைமையிலான குழு, அதிநவீன டா வின்சி XI ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையைப் பயன்படுத்தி அகற்றினர். 4 மணி நேரத்திற்குள் மருத்துவர்கள் இந்தக் கட்டியை அகற்றியுள்ளனர்.

 இச்சிகிச்சை மூலம் மிகக் குறைந்த ஊடுருவல் மற்றும் குறைந்த இரத்த இழப்புடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு அடுத்த நாளே டிஸ்சார்ஜ்

அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது இந்த மருத்துவர்களின் மற்றொரு சாதனையாக பார்க்கப்படுகின்றது.

இந்தச் செயல், சவாலான மகளிர் மருத்துவ நிகழ்வுகளிலும் ரோபோடிக் அறுவை சிகிச்சையின் துல்லியம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நிரூபித்துள்ளது. சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துமுடித்த மருத்துவர்களின் குழுவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

மேலும் படிக்க | இராஜேந்திர பாலாஜியை அழைத்து EPS திட்டி இருக்க வேண்டாமா...? - செல்வப்பெருந்தகை

மேலும் படிக்க | "உங்கள் வாக்குரிமை பறிபோகலாம்!" - விஜய் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News