Chennai Rottweiler Dog Attack: சென்னை புழல் புத்தகம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் அதே பகுதியில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
Chennai Rottweiler Dog Attack: கேள்வி கேட்ட முதியவர்
இந்த நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 31) இரவு அந்தப் பகுதியின் வழியாக ராட்வீலர் நாயினை வழக்கறிஞர் என கூறப்படும் ஒருவர் வாக்கிங் அழைத்து வந்ததாக தெரிகிறது. அதுவும் அந்த சாலையானது முட்டு சந்து என்றும் கூறப்படுகிறது. அப்போது மாரியப்பன் அந்த நாயின் உரிமையாளரை நோக்கி, இந்த பகுதியானது முட்டு சந்ததாக உள்ளதே, இந்த பகுதியில் எதற்காக இவ்வளவு பெரிய நாயினை, அதுவும் இந்த இரவு நேரத்தில் வாக்கிங் அழைத்து வருகிறீர்கள்...? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், இங்கு பெண்கள், சிறுவர்கள் என ஏராளமான ஒரு உள்ளனர். இரவு நேரத்தில் இது போன்ற அழைத்து வந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு எனக் கேட்டிருக்கிறார் என்று கேட்டுள்ளார்.
Chennai Rottweiler Dog Attack: நாயை ஏவிவிட்ட உரிமையாளர்
அதற்கு அந்த ராட்வீலர் நாயின் உரிமையாளர் முதியவரிடம் தகாத வார்த்தைகள் பேசியதோடு நான் சொன்னால் இந்த நாயானது உன்னை இப்பொது கடிக்கும் பார்க்கிறாயா? எனக் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து வாக்குவாதம் உச்சம் பெற்ற சமயத்தில், ராட்வீலர் நாயை அதனுடைய மொழியிலேயே அழைத்து கடிக்கச் சொல்லி அதன் உரிமையாளர் சொன்னதாக தெரிகிறது.
Chennai Rottweiler Dog Attack: வழியில் துடித்த கணவர்... காப்பாற்றிய மனைவி
இதனை அடுத்து அந்த ராட்வீலர் நாயானது முதியவரை மாறி மாறி கடித்துள்ளது. மேலும் அவரது மார்பு, பின் பக்கம், தொடை உள்ளிட்டவற்றை தந்த ராட்வீலர் நாய் தொடர்ந்து கடித்து தாக்கி உள்ளது. இதில் அலறி துடித்த முதியவரின் அலறல் சத்தம் கேட்டு, அவருடைய மனைவி ஓடிவந்து அந்த நாயின் உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார்.
நீயும் சென்று விடு இல்லை என்றால் உன்னையும் நாயை விட்டு கடிக்க வைப்பேன் அவர் மிரட்டியதாக தெரிகிறது. இதனை அடுத்து தனது கணவரை காப்பாற்றிக் கொண்டு உடனடியாக முதியவர் மாரியப்பனை, அவரது மனைவி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மாரியப்பனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாய் கடிக்கான மருந்தும் செலுத்தப்பட்டதாக தெரிகிறது.
Chennai Rottweiler Dog Attack: புகார் அளித்தும்... பலன் இல்லை...
இதனை தொடர்ந்து இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட அந்த வழக்கறிஞர் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாரியப்பன் மற்றும் அவரது மனைவி புகார் அளித்தனர். ஆனால், அந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
அந்த வழக்கறிஞர் என கூறப்படும் அந்த நபர் குறித்தும் எந்தவித தகவல்களும் காவல்துறை சார்பில் தற்போது வரை தெரிவிக்கவில்லை. வழக்கறிஞர் என்பதால் நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குகிறதா என்பதை தற்போது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் ஒரு கேள்விக்குறியாக உள்ளது?. தற்போது இந்த சம்பவத்தின் சிசிடிவி வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் அண்ணாமலை தொடர்வாரா? முழு ரிப்போர்ட்
மேலும் படிக்க | 22 ஆண்டுகால பகையும்... 21 கொலைகளும்... தலைமுறைகளை தாண்டிய வன்மம் - முழு பின்னணி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









