Chennai Kilpauk Hospital Rowdy Murder: தலைநகர் சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இநத் மருத்துவமனை எப்போதுதே பரப்பாகவே இருக்கும். தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வெளி நோயாளிகளும் அடிக்கடி கீழ்ப்பர்க்கம் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இன்று (ஜனவரி 12) கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள்ளேயே புகுந்து ஒரு கும்பல் ரவுடியை படுகொலை செய்துள்ளது.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அதிர்ச்சி
கொலை செய்யப்பட்டது ஆதி என தெரியவந்துள்ளது. ரவுடி ஆதி மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், குறிப்பாக ஒரு கொலை வழக்கில் முக்கிய நபராக இருந்து போலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் சுசித்ரா என்பவரின் குழந்தை கடந்த ஒரு மாத காலமாக உடல்நலக் குறைவு காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை நேற்று உயிரிழந்துள்ளது.
இதையடுத்து, சுசித்ராவுக்கு ஆறுதல் கூறும் நோக்கில் நேற்று இரவு ரவுடி ஆதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது மருத்துவமனை அலுவலக வளாகம் அருகே மறைந்திருந்து காத்திருந்த மூன்று மர்ம நபர்கள், ஆதியை சுற்றி வளைத்து அரிவாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ரவுடி ஆதி, ரத்த வெள்ளத்தில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டிற்குள் ஓடி விழுந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அரசு மருத்துவமனை போன்ற பாதுகாப்பு மிகுந்த இடத்தில், அதுவும் இரவு நேரத்தில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரவுடி வெட்டிக் கொலை
தகவல் கிடைத்ததும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு உடனடியாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் கிடைத்த ரத்தக்கறைகள், ஆயுத தடயங்கள் மற்றும் அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே நிலுவையில் உள்ள கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் பழிவாங்கும் நோக்கில் தாக்குதல் நடத்தினார்களா? சுசித்ராவைச் சுற்றிய தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இந்த கொலை நடந்ததா? முன் விரோதம் அல்லது பகை காரணமாக வேறு கும்பல் தாக்குதல் நடத்தியதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சுசித்ராவின் உறவினர்களான சூர்யா, அலிபாய் மற்றும் கார்த்திக் ஆகிய மூவர் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு, போலீசார் அவர்களை தேடி விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மழை வெளுக்கும்! டெல்டா, சென்னையில் இன்று கனமழை பெய்யும்.. வெதர்மேன் முக்கிய அலர்ட்
மேலும் படிக்க: சென்னையில் இருந்து தனி விமானம்.. டெல்லிக்கு பறந்த விஜய்! சிபிஐ முன் இன்று ஆஜார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









