)
Chennai Sanitation Workers Protest : சென்னையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம், தொடர்ந்து 8வது நாளாக நடைப்பெற்று வருகிறது. சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் ஏன் நடந்து வருகிறது? இவர்களுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தூய்மை பணியாளர்களின் போராட்டம்:
சென்னை மாநகராட்சியில், மண்டல வாரியாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி சுகாதாரப்பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து தூய்மை பணியாளர்கள் 8வது நாளாக மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியின் 11 மண்டலங்களில், தனியார் நிறுவனங்கள் மூலமாக தூய்மை பணிகளானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15 மண்டலங்களில், 11 மண்டலங்களுக்கு மட்டும்தான் இந்த நிலை. மீதமிருக்கும் 4 மண்டலங்களில் மாநகராட்சியின் ஒப்பந்த தொழிலாளர்களாக, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்படி, ரூ.22,950 ஆனது ஊதியம் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கோரிக்கைகள்:
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதலாக ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய 2 மண்டலங்களீன் தூய்மை பணிகளும் தனியார் வசம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதையடுத்து, தண்டையார்பேட்டை, அம்பத்தூர், அண்ணானகர் உள்ளிட்ட பகுதிகளையும், தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருவதாக தூய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தனியார்வசம் தூய்மை பணிகள் ஒப்படைக்கப்படும் பட்சத்தில், அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு ஊதியமாக ரூ.16,950 மட்டும் வழங்கப்படும் என்பது தூய்மை பணியாளர்களின் கூற்றாக இருக்கிறது. இதனால், தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும், பணி நிரந்தரம் வேண்டியும் தூய்மை பணியாளர்களின் போராட்டமானது தொடர்ந்து நடந்து வருகிறது.
மேயர் பிரியாவின் பதில் என்ன?
தூய்மை பணியாளர்களின் போராட்டம் குறித்து சென்னை மேயர் பிரியா சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டியளித்திருதார். பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் 5,6 ஆகியவை தனியார் மயமாக்கப்பட்டதாக கூறிய அவர், இதற்கு முன்னரே, 10 மண்டலங்களில் தனியார் மூலமாக பணிகள் சிறப்பாக நடந்து வருவதாக கூறினார்.
பணி பாதுகாப்பு:
தூய்மை பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்றாக பணி பாதுகாப்பானது இருக்கிறது. இது குறித்து பேசிய மேயர் பிரியா, மாநகராட்சி சார்பில் அவருக்கு பணி பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்களின் இடங்களை வேறு யார் மூலமாகவும் நிரப்பாமல், அவர்கள் பணிக்கு திரும்பும் வரை அவர்களின் இடம் காலியாக இருக்கும் எனவும் பிரியா தெரிவித்துள்ளார்.
சம்பளம்:
தனியார் மயமாக்கப்பட்ட போது எப்படி சம்பளம் வழங்கப்பட்டதோ அதே போலத்தான் இப்போதும் சம்பளம் வழங்கப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்தார். மேலும், கூடுதலாக, PF மற்றும் ESI மூலம் இன்சூரன்ஸ் வழங்கப்படுவதாகவும், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை வழங்கப்படுவதாகவும், பண்டிகை காலங்களில் போனஸ் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
பெருகும் குப்பை..
தூய்மை பணியாளர்களின் போராட்டம் தாெடர்ந்து வருவதால், நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பை கூளங்கள் தேங்கி வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்த சமயத்தில், மேயர் பிரியா உள்பட இன்னும் எந்த அரசு அதிகாரியும் தூய்மை பணியளர்கள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதையடுத்து, போராட்டம் நடத்துபவர்களுக்கு மாநகராட்சி தரப்பில் நோட்டிஸ் தரப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ