)
சென்னை திருவொற்றியூர் எழுத்துக்காரன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் வயது 55 சென்னை மாநகரப் போக்குவரத்துக் துறையில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து நாலரை மணி அளவில் 56 சி பேருந்தில் ஏறி திருவொற்றியூரில் இருந்து உயர் நீதிமன்றம் சென்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் இருந்து திருவொற்றியூர் பணிமனைக்கு பேருந்து வந்த போது லேசாக நெஞ்சு வலிப்பதாக ஓட்டுனரிடம் தெரிவித்து இருந்தார் மருத்துவமனைக்கு செல்வதற்காக டைம் கீப்பரிடம் தகவல் தெரிவிப்பதற்காக சென்றபோதுஅவரை டைம் கீப்பர் நாற்காலியில் அமர வைத்துள்ளார் நாற்காலியில் அமர்ந்திருந்த ரமேஷ் சரிந்து கீழே விழுந்துள்ளார்.
சக பயணிகள் அவருக்கு முதல் உதவி செய்து அங்கு இருந்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் ஸ்டான்லி மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர் .
நடத்துனர் ரமேஷ் உயிரிழந்தது தொடர்பாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டனர் அப்பொழுது அவர் நெஞ்சுவலி என கூறியதை சக பயணிகள் காவல்துறையிடம் தெரிவித்தனர்.
பணியின் போது உயிரிழந்த நடத்துனர் ரமேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர் இந்த சம்பவம் மாநகரப் போக்குவரத்து ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ