Chennai To Tiruvannamalai Train Options: தெய்வீக தளமான திருவண்ணாமலைக்கு தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்து வருகின்றனர். குறிப்பாக பக்தர்களின் நலனுக்காகவே தெற்கு ரயில்வே நிறுவனம் சென்னையிலிருந்து திருவண்ணமலைக்கு பல முக்கிய மற்றும் புதிய ரயிலை இயக்கி வருகின்றது. இதன் மூலம் மாதாந்திர கிரிவலம், சிவராத்திரி, மஹா சிவராத்திரி, பௌர்ணமி வேளைகளில் பக்தர்கள் சிரமமின்றி திருவண்ணாமலைக்கு சென்று வர முடிகிறது.
இந்நிலையில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு (Tiruvannamalai) நேரடியாகவும், காட்பாடி வழியாகவும் பல ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் முக்கியமாகப் பெரம்பூர் அல்லது சென்னை கடற்கரை நிலையங்களில் இருந்து புறப்படுகின்றன. அவற்றின் முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
பெரம்பூர் - திருவண்ணாமலை
ரயில் எண் : PRR TEN SF EXP (22605)
டிக்கெட் கட்டண விலை விவரம்
ஸ்லீப்பர் பிரிவு (Sleeper) கட்டணம் : ரூ.205
தேர்ட் ஏசி (3A - Third AC) பிரிவு கட்டணம் : ரூ.565
செகண்ட் ஏசி (2A - Second AC) பிரிவு கட்டணம் : ரூ.770
இந்த ரயில் ஒவ்வொரு செவ்வாய்கிழமை மற்றும் சனிக்கிழமை இயக்கப்படும். மேலும் இந்த ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1:50க்கு கிளம்பும் திருவண்ணாமலைக்கு மாலை 5:26க்கு சென்றடையும்.
பெரம்பூர் - திருவண்ணாமலை
ரயில் எண் : KGP VM SF EXP (22603)
டிக்கெட் கட்டண விலை விவரம்
ஸ்லீப்பர் பிரிவு (Sleeper) கட்டணம் : ரூ.205
தேர்ட் ஏசி (3A - Third AC) பிரிவு கட்டணம் : ரூ.565
செகண்ட் ஏசி (2A - Second AC) பிரிவு கட்டணம் : ரூ.770
இந்த ரயில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இயக்கப்படும். மேலும் இந்த ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1:50க்கு கிளம்பும் திருவண்ணாமலைக்கு மாலை 5:26க்கு சென்றடையும்.
சென்னை எழும்பூர் - திருவண்ணாமலை
ரயில் எண் : MS TNM SPECIAL (06107)
இந்த ரயில் சிறப்பு ரயில் என்பதால், திருவிழா காலங்களிலும், பௌர்ணமி கிரிவல நாட்களிலும் மட்டுமே பெரும்பாலும் இயக்கப்படும். மேலும் இந்த ரயில் காலை 10:15க்கு புறப்படும். திருவண்ணாமலைக்கு மதியம் 03:00க்கு சென்றடையும்.
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை MEMU
ரயில் எண் : MSB-TNM MEMU PASS (66033)
இந்த ரயில் சிறப்பு ரயில் என்பதால், திருவிழா காலங்களிலும், பௌர்ணமி கிரிவல நாட்களிலும் மட்டுமே பெரும்பாலும் இயக்கப்படும். மேலும் இந்த ரயில் மாலை 06:00க்கு புறப்படும். திருவண்ணாமலைக்கு இரவு 11:40க்கு சென்றடையும்.
பொதுவாக சில ரயில்கள் பௌர்ணமி கிரிவலம், விசேஷ காலங்களில் அல்லது பண்டிகை காலங்களில் மட்டுமே இயக்கப்படும். இதில் பெரும்பாலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளே அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை ஒரு முக்கிய யாத்திரை மற்றும் சுற்றுலாத்தங்களில் ஒன்றாக இருந்தாலும், சென்னையில் இருந்து நேரடி ரயில் போதுமான அளவு இல்லை. பயணிகள் ரயிலில் திருவண்ணாமலை செல்ல வேண்டுமானால், 54 கி.மீ., தொலைவில் உள்ள விழுப்புரம் சென்று அங்கிருந்து செல்ல வேண்டும். இதனால் இனி வரும் காலங்களில் தெற்கு ரயில்வே கூடுதல் ரயில்களில் இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | திருவண்ணாமலை கிரிவலம் 2026: மாசி மாத பவுர்ணமி நேரமும், முக்கிய குறிப்புகளும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









