குடியரசு தின விழா : சென்னையில் போக்குவரத்து மாற்றம் - காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் போக்குவரத்து மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jan 18, 2025, 12:48 PM IST
  • சென்னை போக்குவரத்து மாற்றம்
  • போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு
  • 4 நாட்கள் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது
குடியரசு தின விழா : சென்னையில் போக்குவரத்து மாற்றம் - காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சென்னையில் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட இருப்பதால் போக்குவரத்து மாற்றங்கள் நான்கு நாட்களுக்கு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நமது குடியரசு தினவிழா கொண்டாட்டம் வருகிற 26.01.2025-ம் தேதி காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்படவிருக்கிறது, இதனை முன்னிட்டு ஜனவரி 26 மற்றும் ஒத்திகை நாட்களான ஜனவரி 20, 22 மற்றும் 24 ஆம் தேதி ஆகிய மேற்கண்ட 4 தினங்களுக்கு கீழ்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Add Zee News as a Preferred Source

1) மேற்கண்ட தினங்களில் காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே. மடம் சாலை, திருவேங்கடம் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, வெங்கடேச அக்ரகாரம் தெரு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ அமிர்தான்சன் சந்திப்பு, பி.எஸ். சிவசாமி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, மியூசிக் அகாடமி, டி.டி.கே. சாலை, கொளடியா மட் ரோடு ராயபேட்டை மருத்துவமனை, இராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள், (மாநகர பேருந்துகள் உட்பட) காந்திசிலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன சாலை நோக்கி திருப்பபட்டு ராயபேட்டை 1 பாயீண்ட், நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டி.டி.கே. சாலை, கொௗடியா மட் ரோடு, ராயபேட்டை மருத்துவமனை, இராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

4) மயிலாப்பூர் பகுதியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் இராயப்பேட்டை நெடுஞ்சாலை வந்து ராயபேட்டை 1 பாயீண்ட்டில், இதர வாகனங்கள் இடதுபுறமாகவோ (அ) வலதுபுறமாகவோ திரும்பி தங்களின் இலக்கை அடையலாம். மாநகர பேருந்துகள் இடதுபுறமாக திரும்பி டாக்டர்இராதாகிருஷ்ணன் சாலை, நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டி.டி.கே. சாலை, கொளடியா மடம் சாலை, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக பிராட்வே சென்றடையலாம்.

டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும்.
டாக்டர்.பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பி விடப்படும்.

காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதிசாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்படும். வாலாஜாசாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும். அண்ணாசதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மாற்றப்படும்.

பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையில் செல்லாமல் வடக்கு துறைமுக சாலை வழியாக ராஜா அண்ணாமலை மன்றம், வாலாஜா பாயிண்ட், அண்ணாசாலை, அண்ணாசிலை, ஜீ.பி.ரோடு, இராயபேட்டை மணி கூண்டு, வெஸ்ட் காட் சாலை, ஜீ.ஆர்.எச்., அஜந்தா சந்திப்பு இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை (வி.பி.ராமன் சாலை), ஜஸ்டிஸ் ஜம்புலிங்கம் தெரு இடதுபுறம் (அ) வலதுபுறம் திரும்பி டாக்டர்.ராதாகிருஷ்ணன் சாலை வழியாக தங்கள் இலக்கை சென்றடையலாம்.

அண்ணாசாலை மற்றும் கொடிமர இல்ல சாலை (வாலாஜா பாய்ண்ட்) சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | மதுரை மெட்ரோ ரயில்: திட்டத்திற்கு ஓகே சொல்லுமா மத்திய அரசு...? CMRL அதிகாரிகள் ஆய்வு

மேலும் படிக்க | போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்க போகும் தமிழ்நாடு அரசு - காரணம் இதுதான்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News