சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி கிடையாது - நீதிபதி உத்தரவு என்ன?

Chennai Vel Yatra: திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக பாரத் இந்து முன்னணி சார்பில் சென்னையில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 14, 2025, 01:57 PM IST
  • பிப்.18ஆம் தேதி வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி மனு.
  • அரசு தரப்பு அனுமதி அளிக்கக்கூடாது என வாதம்.
  • தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும் - அரசு தரப்பு
சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி கிடையாது - நீதிபதி உத்தரவு என்ன?

Chennai Vel Yatra: திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக (Thiruparankundram Issue) சென்னையில் யாத்திரை நடத்துவது தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பின் வட சென்னை மாவட்ட துணை தலைவர் எஸ். யுவராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாள்களுக்கு முன் மனு தாக்கல் செய்திருந்தார்.

Add Zee News as a Preferred Source

Chennai Vel Yatra: சென்னையில் வேல் யாத்திரை நடத்த கோரிக்கை

அந்த மனுவில்,"மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானின் மலை. அதனை இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். அந்த மலையை காக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோவில் வரை வரும் பிப்ரவரி 18ஆம் தேதி அன்று (செவ்வாய்கிழமை) வேல் யாத்திரை (Chennai Vel Yatra) நடத்த அனுமதி அளிக்க, காவல்துறை உத்தரவிட வேண்டும்" என எஸ். யுவராஜ் கோரிக்கை விடுத்திருந்தார்.

Chennai Vel Yatra: அரசு நீதிமன்றத்தில் சொன்னது என்ன?

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான  வழக்கறிஞர், "திருப்பரங்குன்றம் மலை உரிமை குறித்து ஏற்கனவே பிரிவியூ கவுன்சில் வரை சென்று சிக்கந்தர் தர்கா, கொடி மரம், மலைவழிபாதை, நெல்லித் தோப்பு ஆகியவை இஸ்லாமியர்களுக்கே சொந்தம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு மீண்டும் இதுகுறித்து பிரச்சனை எழுப்புவது அவசியமற்றது" என வாதிட்டார். 

Chennai Vel Yatra: வேலை யாத்திரைக்கு அனுமதி தரக்கூடாது... ஏன்?

தொடர்ந்து, "தற்போது பேரணிக்கு அனுமதி கோரி கேட்கப்பட்டுள்ள வழித்தடம் என்பது போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலை ஆகும். அதுமட்டுமின்றி வேறு எந்த இடத்தில் பேரணிக்கு அனுமதி வழங்கினாலும் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும். மதுரையில் இந்து முன்ணணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள நிலையில் மீண்டும் அதே பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்துவதை நீதிமன்றம் ஊக்குவிக்க கூடாது. 

மதுரையில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் கூட நீதிமன்ற நிபந்தனையை மீறி பொது அமைதிக்கும் மத நல்லிணத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளனர். அதற்காகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகக்ள் மத வேறுபாடின்றி ஒரே சமுதாயமாக வாழ்ந்து வரும் நிலையில், மத நல்லிணக்கத்தை காப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. எல்லோருடைய மத நம்பிக்கைகளையும், வழிபாட்டு உரிமைகளையும் யாருடைய இடையூறுமின்றி அரசு பாதுகாக்கும்" எனவும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். 

Chennai Vel Yatra: நீதிபதி உத்தரவு 

அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி இளந்திரையன், வேல் யாத்திரைக்கு அனுமதி கோரியிருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து, நீதிபதி அவரது உத்தரவில்,"பொது அமைதி, மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த  போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது.

கருத்து சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த போராட்டக்காரர்கள், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் தவறாக பயன்படுத்த முடியாது. திருப்பரங்குன்றம் மலை சம்பவத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டதால் போராட்டம் நடத்த எந்த அவசியமும் இல்லை.

மத ரீதியிலான பதட்டங்களை தணிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து பொது ஒழுங்கையும், மத நல்லிணக்கத்தையும் மீட்டெடுக்க வேண்டும். மத நம்பிக்கைகளும், உணர்வுகளும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை" என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க |  திருப்பரங்குன்றம் தர்காவை வேறு இடத்திற்கு மாற்றுங்கள் - ஹெச்.ராஜா அதிரடி!

மேலும் படிக்க | திருப்பரங்குன்றம் விவகாரம்: மத நல்லிணக்க அரசியலுக்கு சம்மட்டி அடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News