)
சென்னை: சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் மண்டபத்தின் எதிரே தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண் கீழே இருந்த தங்க சங்கிலியை கண்டதும் அதை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், அவரை போலீசார் வெகுவாக பாராட்டினர். இந்த சம்பவம் குறித்து இந்த பதிவில் காணலாம்.
சென்னை மாநகராட்சி 13 வது மண்டலத்தில் சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த 38 வயதான கிளாரா என்ற பெண் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று வழங்கம்போல் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் மேற்கு பகுதியில் உள்ள கோயில் திருமண மண்டபத்தின் எதிரே உள்ள ஈசிஆர் சாலையை சுத்தம் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது சாலையில் ஒரு தங்கச் சங்கிலியைக் கண்டுள்ளனர்.

தன்னுடைய நேர்மையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் கீழே கிடைத்த தங்க சங்கிலி குறித்து அவருடைய சூப்பர்வைசரிடம் அவர் கூறியுள்ளார். ஏழ்மையிலும் நேர்மை என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் இதுதான் என்று அவரது இந்த செயல் காட்டுகிறது.
உடனே திருவான்மியூர் வந்த தூய்மை பணி குழுவினர் தூய்மை பெண் பணியாளர் கிளாரா உடன் அருகில் உள்ள திருவான்மியூர் காவல் நிலையம் சென்று சுமார் 5:45 மணியளவில் அங்கிருந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் மாலதியிடம் கீழே கிடந்த தங்க சங்கிலியை ஒப்படைத்துள்ளனர்.
தூய்மை பெண் பணியாளரின் நல்ல குணத்தையும், நேர்மையான செயலையும் பாராட்டி, நன்றி தெரிவித்த குற்றப்பிரிவு ஆய்வாளர் மாலதி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ