)
Chidambaram Man Poured Hot Badam Milk : சிதம்பரம் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து - அமுதா தம்பதியினர். மாரிமுத்து டைலர் வேலை பார்த்து வரும் நிலையில் அமுதா கம்யூனிஸ்ட் கட்சி நகர்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
இச்சூழலில் அவரது மகன் கஞ்சா ராகுல் என்பவர் மீது பத்துக்கும் மேற்பட்ட பல வழக்குகள் இருந்து வருகிறது. குறிப்பாக பல்வேறு கடைகளில் சென்று மிரட்டி பணம் கேட்பது, செல்போன் திருட்டு, இருசக்கர வாகன திருட்டு, உள்ளிட்ட பல்வேறு வழக்கின் கீழ் அவ்வப்போது சிறைக்கு சென்று வந்துள்ளார்.
அவர் தொடர் குற்றச்செயலை தடுக்கும் வகையில் போலீஸார் குண்டாஸ் சட்டம் போட்டு சிறைக்கு அனுப்பினர். அண்மையில் அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
கடந்த 22 ஆம் தேதி இரவு 11.40 மணியளவில் சிதம்பரம், வேணுகோபால் பிள்ளை தெருவில் உள்ள பாதாம் பால் கடைக்கு கஞ்சா ராகுல் நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அவர்கள் பாதாம் பால் குடித்ததற்கு கடையின் வட மாநில ஊழியர்கள் பணம் கேட்டுள்ளனர். அப்போது ராகுலின் நண்பர்கள் "நாங்கள் எதற்கு தர வேண்டும் நாங்கள் சிதம்பரத்தில் பெரிய ரவுடி, எங்களைப் பார்த்து பணம் கேட்கிறாயா" என வாக்குவாதம் செய்துள்ளனர்.
பின்னர், சுட சுட இருந்த பாதாம் பாலை ஊழியர் முகத்தில் ஊற்றி அங்கிருந்த கிளாஸ்களை எடுத்து உடைத்து சண்டையிட்டுள்ளனர். ராஜ போதையில் இருந்த கஞ்சா ராகுல் தள்ளாடி வந்து, அங்கிருந்த பாதம் பாலை குடித்துவிட்டு நண்பர்களை சமாதானம் செய்துள்ளார்.
இந்நிலையில் போலீசார் வருவதைக் கண்ட கஞ்சா ராகுல் மற்றும் அவரது நண்பர்களுடன் தப்பி சென்றார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வரலாகி வருகிறது. வழக்கு பதிவு செய்த போலீஸார் கஞ்சா ராகுல் மற்றும் சபரி இருவரையும் கைது செய்து, மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.
தொடர்ந்து பல்வேறு வழக்குகளை சந்தித்து வரும் கஞ்சா ராகுலுக்கு உரிய தண்டனை விதிக்க வேண்டும், மேற்படி அவர் குற்ற செயல்களில் ஈடுபட முடியாதபடி தண்டிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ