)
Chennai Rain Latest News Updates: ஒரு மாதத்தில் 3 முறை 100 மில்லி மீட்டர் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சென்னைக்கு இது வரலாற்று சிறப்புமிக்க ஆகஸ்ட் மாதமாக அமைந்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவரது X தளத்தில் இன்று காலை போட்ட பதிவில், "2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் சென்னைக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாதமாக மாறியுள்ளது. முதல் முறையாக, ஒரே மாதத்தில் மூன்று 100+ மில்லி மீட்டர் மழைப்பொழிவுகள் பதிவாகி உள்ளது" என குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட் 22, 23 மற்றும் 31 ஆகிய தேதிகளில் 100+ மில்லி மீட்டர் மழைப் பொழிந்துள்ளது என்றும் இதுபோன்ற ஒரு தொடர்ச்சி சென்னை வரலாற்றில் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, நேற்று வட சென்னையில் ஒரு மேக வெடிப்பு நிகழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், "இன்று காலை 8.30 மணி வரை 24 மணி நேர ரேடார் மழைப்பொழிவு தரவு மற்றும் பதிவான மழைப்பொழிவு வட சென்னையில் மழையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. நேற்றைய மழையை வானத்தில் இருந்து வரும் நீர்வீழ்ச்சிகள் போல் உணர்ந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Historic August for Chennai with 3 - 100 mm Rainfall events in a Month
— Tamil Nadu Weatherman (@praddy06) August 31, 2025
==================
August 2025 has turned out to be a historic month for Chennai. For the first time ever, the city has recorded three 100+ mm events in a single month (on August 22, 23 and 31). Such a… pic.twitter.com/gZkzKyxb8C
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ், மேக வெடிப்பு என்பது ஒரு சிறிய பகுதியில் ஒரு மணி நேரத்திற்குள் 100 மிமீ அல்லது அதற்கு மேற்பட்ட மழைப்பொழிவு ஆகும் என்கிறார் பிரதீப் ஜான். சிறிய பகுதி என்றால் 20-30 சதுர கி.மீ., என வைத்துக்கொள்ளலாம். ரேடார் தரவு மற்றும் நிலைய பதிவுகள் வட சென்னையின் சில பகுதிகள் இந்த வரம்பை விட அதிகமாகப் பெற்றதை உறுதிப்படுத்துகின்றன என்றும் இது ஒரு மேக வெடிப்பு நிகழ்வாக அமைகிறது என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதத்தில் இயல்பாக, சென்னையில் 140 மில்லி மீட்டர் மழைப்பதிவாகும் என்றும் சென்னையின் வானிலை நிலையம் உள்ள நுங்கம்பாக்கத்தில் மட்டும் இந்த மாதம் 200 மிமீ தாண்டியுள்ளது என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்த மாதம் சென்னையின் மழை வரலாற்றில் மிகவும் விதிவிலக்கான ஆகஸ்ட் மாதங்களில் ஒன்றாகக் கருதப்படும் என்றும் அவர் பதிவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையை பொருத்தவரை நேற்றிரவு 10 மணிமுதல் 12 மணிவரை மூன்று இடங்களில் அதி கனமழையும், 8 இடங்களில் மிக கனமழையும், 28 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மணலியில் (2வது மண்டலம்) 271.5 மில்லி மீட்டர் மழையும், மணலி நியூ டவுனில் (2வது மண்டலம்) 255.6 மில்லி மீட்டர் மழையும், விம்கோ நகரில் (முதல் மண்டலம்) 228.6 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ