Tamil Nadu Latest News Updates: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, பிறப்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
MK Stalin News: நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு
இந்த விவாதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றியபோது, "இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் கடந்த 4 ஆண்டுகளில் செய்த சாதனைகளால் நடுநிலைப் பள்ளியில் இடைநிற்றல் என்பதே இல்லை என நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 28.4% ஆக உள்ள நிலையில் தமிழ்நாட்டின் சேர்க்கை விகிதம் 47% ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு, ஆளுநர், நிதி நெருக்கடி என தடைகளை தாண்டி சாதனைகள் செய்துள்ளோம். தமிழ்நாடு என்பது மணிப்பூர் அல்ல, காஷ்மீர் அல்ல.
MK Stalin News: கருணாநிதி இருந்திருந்தால்...
மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு இன்று எல்லாத் துறைகளிலும் தலை நிமிர்ந்து உள்ளது. தமிழ்நாட்டில் திமுக அரசு செய்த சாதனைகளால் மீண்டும் 7வது முறையாக திமுக ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த ஆட்சியாளர்கள் செய்த நிர்வாக சீர்கேட்டால் நிர்வாக கட்டமைப்பு தரைமட்டத்துக்கு சென்றது. இந்தியாவில் எந்த மாநிலங்களும் செய்யாத சாதனையை தமிழ்நாடு செய்து வருகிறது. தமிழ்நாட்டில் 1.4% பேர்தான் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர். கருணாநிதி இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் சாதனை... சாதனை... என்று சொல்லி இருப்பார்" என்றார்.
MK Stalin News: காலனி சொல் நீக்கம்
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், "காலனி என்ற சொல் வசைச்சொல்லாக மாறியிருப்பதால் அரசு ஆவணத்தில் இருந்து நீக்கப்படும். கோவையில் ரூ.5 கோடி செலவில் தீவிரவாத தடுப்பு பிரிவு அமைக்கப்படும். ஐந்தாவது காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் இருப்பது உறுதி செய்யப்படும்" என்றார்.
மேலும் படிக்க | மீண்டும் அமைச்சராக பதவியேற்ற மனோ தங்கராஜ்... பால்வளத்துறை ஒதுக்கீடு!
மேலும் படிக்க | அண்ணாமலைக்கு எம்பி பதவி இல்லை! வேறு ஒருவருக்கு கொடுத்த பாஜக!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ








