நடிகர் மற்றும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா (48) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (மார்ச் 25) காலமானார். மாலை 6 மணி அளவில் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் இருக்கும்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இந்த நிலையில், இவரது மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது, நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான திரு. மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் திரு. மனோஜ் அவர்கள். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.
மேலும் படிங்க: Manoj Bharathiraja: நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார் - பிரபலங்கள் இரங்கல்
இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
கனிமொழி இரங்கல்
இது குறித்து கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இயக்குனர் பாரதிராஜா அவர்களின் மகனும், இயக்குனர் மற்றும் நடிகருமான திரு. மனோஜ் கே பாரதி அவர்களின் மறைவுச் செய்தியறிந்து துயருற்றேன். இத்துயர்மிகு வேளையில் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









