காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் (93) நேற்று (ஏப்ரல் 08) இரவு காலமானார். கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்தார். இதையடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் காலமானார்.
குமரி அனந்தனின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது மகளான தமிழிசை செளந்திரராஜனுக்கு ஆறுதலையும் தெரிவித்தார். இந்த நிலையில், குமரி அனந்தனின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு விடுதலை நாள் விழாவில் அய்யா குமரி அனந்தன் அவர்களுக்குத் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கிய தருணத்தில், அவர் என் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு உறவாடிய நினைவுகள் கண்ணீரைப் பெருக்கெடுக்க வைக்க - அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினேன்.
அவரைப் பிரிந்து வாடும் அருமைச் சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன். தகைசால் தமிழர் அய்யா குமரி அனந்தன் அவர்களது பெருவாழ்வைப் போற்றிடும் வகையில், அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ