விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அடுத்த வடகரையில் பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியை அடுத்த வடகரையில் ராஜா சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். இன்று (ஜூன் 11) வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று (ஜூன் 11) திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பட்டாசு ஆலை முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. விபத்தில் 3 பேர் சம்பவ இடைத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பயங்கர வெடி விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்தவர்களுக்கு இரங்கள் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 50000 ரூபாயும் நிவாரண உதவியாக அறிவித்துள்ளார்.
மேலும் படிங்க: ரூ.50,000 ஊதியத்தில் தமிழ்நாடு அரசு வேலை - அட்டகாசமான அறிவிப்பு,முழு விவரம்
மேலும் படிங்க: இந்த பிரச்சனை இருந்தால் முக கவசம் கட்டாயம் - அமைச்சர் மா. சுப்பிரமணியம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









