)
TN 200 Units Free Electricity: தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றதும், 200 யூனிட் இலவச மின்சார திட்ட கோப்பில் கையெழுத்து போட்டுள்ளார். இதன் மூலம், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கு 200 யூனிட் வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. அதே நேரத்தில், 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு தான் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றுக் கொண்டார். ஜெயலலிதாவுக்கு பிறகு இளம் முதல்வராக விஜய் பதவி பதவி ஏற்றது பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது தவெக.
ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் 120 இடங்களை தவெக பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 13 ஆவது முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
| 1) | குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 |
| 2) | ஆண்டுக்கு 6 எல்பிஜி சிலிண்டர் இலவசம் |
| 3) | திருமணத்திற்கு 1 சவரன் தங்கம் + பட்டுச் சேலை |
| 4) | பிறக்கும் குழந்தைக்கு தங்க மோதிரம் |
| 5) | பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் |
| 6) | 200 யூனிட் இலவச மின்சாரம் |
| 7) | வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4000 |
விஜயுடன் சேர்ந்து 9 எம் எல் ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். முதலமைச்சராக பதவியேற்ற விஜய்க்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பதவியேற்ப்பை தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் முதல்முறையாக தமிழக சட்டமன்றத்திற்கு சென்று பல்வேறு கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
இதற்கிடையில், தனது வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றுக்கு முதலமைச்சர் விஜய் கையெழுத்து போட்டுள்ளார். தேர்தல் பரப்புரையின் போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்ன விஜய் வாக்குறுதியை அள்ளி வீசினார். 200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு முதல் முதலாக முதல்வர் விஜய் கையெழுத்து போட்டுள்ளார். மேலும், பெண்கள் பாதுகாப்பிற்கான சிங்கப்பெண்கள் சிறப்பு படை, மாவட்டந்தோறும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் என்ற மூன்று முக்கிய கோப்புகளில் முதல்வர் விஜய் தனது கையெழுத்தினை செலுத்தினார். இதில் பெரிதும் கவனம் பெற்றது 200 யூனிட் இலவசம் மின்சாரம் திட்டம்தான். 200 யூனிட் இலவச மின்சாரம் யாருக்கெல்லாம் கிடைக்கும் கிடைக்காது என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே வீட்டு பயன்பாட்டிற்கு 100 யூனிட்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 100 யூனிட் வரை கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாமல் இருந்தது. 100 யூனிட்டுக்கு மேல் தான் கணக்கிடப்பட்டு அதற்கான தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் விஜய் தேர்தல் வாக்குறுதிகளில் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதனை செயல்படுத்தும் வகையில் முதலமைச்சராக பதவியேற்ற முதல் நாளிலேயே, 200 யூனிட் இலவச மின்சார திட்டத்திற்கு கையெழுத்து போட்டுள்ளார்.
அதன்படி இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்களுக்கு மட்டுமே இந்த 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்கள் 200 யூனிட்டிற்கான கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
இது பல நடுத்தர ஏழை எளிய குடும்பங்களின் மின்சார சுமையை கணிசமாக குறைக்கும் குறைக்கும் என்பது உண்மை. திட்டத்தில் முக்கிய அம்சமாக பார்த்தால் 500 யூனிட்டு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள வீதிகளின்படி, எவ்வளவு யூனிட் பயன்படுத்தினாலும் முதல் 100 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தி வந்தவர்களுக்கும் யூரின் இலவசம் மின்சாரம் சலுகையும் வழங்கப்பட்டு வருகிறது.
அதாவது ஒரு வீட்டில் 501 யூனிட் மின்சாரம் பயன்படுத்திருப்பவர்களும் 100 யூனிட் இலவச மின்சாரம் பொருந்தும். ஆனால், தற்போது விஜய் 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மட்டும் 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று கூறியதாக தெரிகிறது. எனவே 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், வாக்குறுதியாக விஜய் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என கூறியிருந்தார். ஆனால், தற்போது 500 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மட்டும் 200 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் இது குறித்து தமிழக அரசு சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்படும் எனவும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.