தானம் அளிக்கப்பட்ட நுரையீரல்... 21 நிமிடங்களில் கொண்டுசென்ற சென்னை மெட்ரோ - குவியும் பாராட்டு

CMRL Organ Transportation: பெங்களூருவில் இருந்து சென்னை கொண்டவரப்பட்ட தானம் அளிக்கப்பட்ட உடலுறுப்பை மருத்துவமனைக்கு விரைவாக கொண்டுசெல்வதில் சென்னை மெட்ரோ முக்கிய பங்காற்றி உள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 9, 2025, 11:40 AM IST
  • ஏர் ஆம்புலன்ஸ் மூலம் நுரையீரல் சென்னை வந்துள்ளது.
  • மீனம்பாக்கம் டூ ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோவுக்கு கொண்டுசெல்லப்பட்டது.
  • 21 நிமிடங்களில் கொண்டுசெல்லப்பட்டது.
தானம் அளிக்கப்பட்ட  நுரையீரல்... 21 நிமிடங்களில் கொண்டுசென்ற சென்னை மெட்ரோ - குவியும் பாராட்டு

CMRL Organ Transportation: பல உயிர்களை காக்கும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டங்களில்தான், உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது. உடலுறுப்பு தானத்திற்கு நாடு முழுவதும் பலரும் பதிவு செய்து கொள்கின்றனர்.

Add Zee News as a Preferred Source

CMRL Organ Transportation: சாலை மார்க்கம் - மெட்ரோ ரயில்

அந்த வகையில், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு நுரையீரல் உடலுறுப்பு தானமாக அளிக்கப்பட்டது, அதை சரியான நேரத்தில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதற்கு சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் முக்கிய பங்காற்றியிருக்கிறது.  

பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் தானம் அளிக்கப்பட்டவரின் நுரையீரல் நேற்று (நவ. 8) சென்னை வந்தது. இந்த நுரையீரல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும். சென்னையில் விமான நிலையத்தில் இருந்து அப்பல்லோ மருத்துவமனை 16.4 கி.மீ., ஆகும். சாலை மார்க்கமாக சென்றால் சுமார் 40-45 நிமிடங்களாகும். சாலை மார்க்கமாக ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்டாலும் அதிக நேரம் எடுக்கும் என்பதால், விரைவாக கொண்டுசென்று நேரத்தை சேமிக்க வேண்டும் என்பதற்காக மெட்ரோ ரயிலை தேர்வு செய்துள்ளனர். மீனம்பாக்கம் - ஏஜி-டிஎம்எஸ் பச்சை வழித்தடத்தில் அமைந்துள்ளது.

CMRL Organ Transportation: உடலுறப்பு போக்குவரத்தில் முக்கிய பங்கு

அதன்படி, சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெறும் 21 நிமிடங்களில் அந்த நுரையீரல் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இடையே 7 நிறுத்தங்களில் ரயில் நின்று சென்றுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று பதிவிட்ட X பதிவில், "சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், இன்று (அதாவது நேற்று) மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்தில் இருந்து ஏஜி-டிஎம்ஸ் மெட்ரோ நிலையத்திற்கு உயிர்காக்கும் உடலுறுப்பு போக்குவரத்தை மேற்கொண்டதில் முக்கிய பங்கு வகித்தது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் (MoHUA) வழிகாட்டுதல்களின்படி, மெட்ரோ ரயில்வேஸ் (வண்டி மற்றும் டிக்கெட்) திருத்த விதிகள், 2023 சமீபத்திய திருத்தங்கள் மூலம் இது மேற்கொள்ளப்பட்டது.

CMRL Organ Transportation: 21 நிமிடங்களில் சென்றடைந்தது...

தானம் அளிக்கப்பட்ட உடலுறுப்பை கொண்டுவந்த மருத்துவக் குழு பெங்களூருவில் இருந்து விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்து, மதியம் 02:07 மணிக்கு மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்தை அடைந்தது. சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் மற்றும் நிலைய ஊழியர்களின் ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்புடன், மருத்துவக் குழு மெட்ரோ ரயிலில் ஏறியது. 

7 நிலையங்களில் நின்று மதியம் 02:28 மணிக்கு டிஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையத்தை பாதுகாப்பாக அடைந்தது. மருத்துவ குழு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு புறப்பட்டது, அங்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற திட்டமிடப்பட்டது.

குறுகிய காலத்திற்குள் சென்னை மெட்ரோ ரயில் ஏற்பாடுகளுடன் அவர்களை விரைவாக மாற்று அறுவை சிகிச்சைக்கு தயார்படுத்தி வசதி செய்ய முடிந்தது. திறமையான நகர்ப்புற போக்குவரத்தின் மூலம் மட்டுமல்லாமல், நகரம் முழுவதும் அவசர மருத்துவ சேவைகள் மற்றும் உயிர்காக்கும் முயற்சிகளுக்கும் பங்களிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு சேவை செய்வதில் சென்னை மெட்ரோ ரயில் அர்ப்பணிப்புடன் உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மாதம் ரூ.72,000 சம்பளம்.. 8ஆம் வகுப்பு தகுதி தான்.. தமிழக அரசு துறையில் அட்டகாசமான வேலை!

மேலும் படிக்க | இனி எழும்பூர் போகாதீங்க.. தென்மாவட்ட ரயில் சேவையில் மேஜர் மாற்றம்.. வெளியான அறிவிப்பு

மேலும் படிக்க | 8ஆம் வகுப்பு படித்தால் போதும்.. கைநிறைய சம்பளத்துடன் அரசு வேலை.. மிஸ் பண்ணாதீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News