)
Coimbatore Bus Driver Mocked Sanitary Worker : ஓசி பஸ் பின்னால வருது, அதுல ஏறுங்கன்னு,தூய்மை பெண் பணியாளர்களை பேசிய அரசு பேருந்து ஓட்டுனர் - காசு குடுத்து டிக்கெட் எடுக்கிறோம், தானே எங்களை ஏன் ? அப்படி சொன்னாய் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள்..
கோவை வெள்ளக்கிணரில் இருந்து துடியலூர் வந்த 111 என்ற எண் கொண்ட அரசு பேருந்தில் பெண் தூய்மை பணியாளர் ஏறிய போது அதன் ஓட்டுநர் உங்களுக்கு ஓசி பஸ் பின்னால வருது, அதுல ஏறுங்கன்னு கூறியதால் கோபம் அடைந்த பெண் தூய்மை பணியாளர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் நாங்கள் காசு குடுத்து டிக்கெட் எடுக்கிறோம், தானே எங்களை ஏன் ? அப்படி சொன்னாய் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு பஸ் :
கோவை வெள்ளக்கிணர் பகுதியில் நேற்று மாலை தூய்மை பணிகளை முடித்து விட்டு துடியலூர் செல்ல அவ்வழியாக வந்த 111 என்ற எண் கொண்ட அரசு பேருந்தில் 3 பெண் தூய்மை பணியாளர்கள் ஏறி உள்ளனர். அவர்கள் பேருந்தில் ஏறும் போது அதன் ஓட்டுனர் ஏம்மா ? உங்களுக்கு ஓசி பஸ் பின்னால வருது அதுல ஏறுங்கன்னு கூறி உள்ளார்.
இதனால் கோபம் அடைந்த அந்த 3 பெண் தூய்மை பணியாளர்களும் ஓட்டுநரிடம் எப்படி ? எங்களை அப்படி சொல்லலாம் என்றும் நாங்கள் காசு கொடுத்து டிக்கெட் எடுக்கின்றோம், தானே எங்களை ஏன் ? ஓசி பஸ்ஸில் வர சொல்கிறாய் என்று கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவருக்கு ஆதரவாக பேசிய நடத்துடனரையும் வெளுத்து வாங்கினர். இதனை பேருந்தில் இருந்த ஒரு பயணி வீடியோ எடுத்து உள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் பொன்முடி ஓசி பஸ் என்று கூறி சர்ச்சை ஆன நிலையில். தற்போது கோவையில் அரசு பேருந்து ஓட்டுநர் இவ்வாறு கூறி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எப்போதும் வரும் பிரச்சனை..!
அரசு, எப்போது பெண்களுக்கு இந்த இலவச பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தியதோ, அப்போதில் இருந்து அதனை ‘ஓசி பஸ்’ என்று பிறர் கூறுவது தொடர்ந்து வருகிறது. பேருந்தில் ஏறும் சில ஆண்களில் இருந்து, அங்கிருக்கும் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் வரை பலர் இதனை கேலி-கிண்டல் செய்தும், காழ்ப்புணர்ச்சியிலும் பேசுவது உண்டு. எளிய மக்கள் இதை பேசும் போது கூட, “ஏதோ அறியாமல் பேசுகிறார்கள்” என்று விட்டுவிடலாம். ஆனால், அமைச்சர்கள் சிலரே இப்படி பேசும் போதும், அரசு கொடுத்த சலுகைகளை குத்திக்காட்டும் போதும், அது உண்மையாகவே வலியை கொடுப்பதாக பெண்கள் பலர் கூறுகின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் முழு காரணத்தை உணராமல் சிலர் பேசுவது, தேவையற்ற வெறுப்புகளுக்கு வழிவகுப்பதாகவும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ