கோவையின் அடையாளத்தை மாற்றும் புதிய திட்டம்! விரைவில் செயல்பாட்டிற்கு வருகிறது!

கோவையில் அமையவுள்ள செம்மொழி பூங்கா அதிக செலவில் கட்டப்பட்டு வருகிறது. நகரின் மையத்தில் வரவுள்ள இந்த பூங்காவிற்கு பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.

Written by - RK Spark | Last Updated : Apr 7, 2025, 11:06 AM IST
  • கோவையில் புதிய பூங்கா.
  • விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது.
  • அதி நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளது.
கோவையின் அடையாளத்தை மாற்றும் புதிய திட்டம்! விரைவில் செயல்பாட்டிற்கு வருகிறது!

கோயம்புத்தூரில் அமையவுள்ள பிரம்மாண்டமான செம்மொழி பூங்கா மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திட்டமாக உள்ளது. அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்த பூங்காவின் கட்டுமான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. கிட்டத்தட்ட 80% பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் பூங்காவிற்கான டெண்டர் விடப்பட்டு, கடந்த நான்கு மாதங்களில் கட்டுமான பணிகள் மிக விரைவாக நடைபெற்று வந்தது. 165 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த பூங்கா, அப்பகுதியின் நிலப்பரப்பை மாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையின் பயன்படுத்தப்படாத இடங்களை சேர்ந்து இந்த பூங்கா கட்டப்பட்டு, ஒட்டுமொத்த கவர்ச்சியையும் கொண்டு வர உள்ளது.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | 'கையெழுத்தை தமிழில் போடுங்கள்...' தமிழக தலைவர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

இந்த பூங்கா இயற்கை எழில்மிகு வகையில் அமைக்கப்பட்டு, மக்களை ஈர்க்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு வரவுள்ள தோட்டக்கலை மற்றும் புதிய தனித்துவமான அம்சங்கள் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நறுமணத் தோட்டம், மூலிகை செடிகள், பல்வேறு  சிற்பங்கள், பாரம்பரிய மரங்கள் உட்பட பல கருப்பொருட்களை இந்த பூங்கா கொண்டிருக்கும். இந்த புதிய பசுமையான பூங்கா, கோவை நகர மக்களின் வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு மேம்படுத்தும் என்பதைப் பார்க்க உள்ளூர்வாசிகள் ஆர்வமாக உள்ளனர். இந்த பூங்கா குறிப்பாக பொழுதுபோக்கு அம்சங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நடைபயிற்சி மற்றும் ஜாகிங் பாதைகள், சைக்கிள் ஓட்டும் பாதைகள், திறந்தவெளி தியேட்டர் மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக உபகரணங்கள் இங்கு இடம் பெற உள்ளது.

குடும்பங்கள் ஒன்றாக தரமான நேரத்தை செலவிடவும், பசுமையான சூழலில் குறைந்த செலவில் பிக்னிக்குகளை அனுபவிக்கவும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் இங்கு அமையவுள்ள மல்டி-லெவல் கார் பார்க்கிங் வசதி மக்களுக்கு இந்த பூங்காவை எளிதாக அணுகுவதை உறுதி செய்யும். போக்குவரத்து நெரிசல் மற்றும் பிரபலமான இடங்களுடன் அடிக்கடி வரும் பார்க்கிங் துயரங்களைப் பற்றிய கவலைகளைத் தணிக்கும். கூடுதலாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் நீர் சேமிப்பு அமைப்பு ஆகியவை இந்த பூங்காவின் நீடித்த தன்மையை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

சென்னை செம்மொழி பூங்கா

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள செம்மொழி பூங்கா, 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடமாக மாறியுள்ளது. தமிழ்நாடு பொதுப்பணித்துறையால் உருவாக்கப்பட்ட இந்த அழகிய பூங்கா, ஒரு காலத்தில் இங்கு இருந்த பிரபல ஹோட்டலை இடித்து கட்டப்பட்டது. இந்த செம்மொழி பூங்கா அதன் பசுமையான மரங்கள், நடைப்பயிற்சி  பாதைகள் மற்றும் துடிப்பான பூச்செடிகளுடன் ஒவ்வொரு நாளும் ஏராளமான பார்வையாளர்கள் மற்றும் காதல் ஜோடிகளை ஈர்க்கிறது. பரபரப்பான சென்னை வாழ்க்கைக்கு மத்தியில் மரங்களுக்கு இடையில் ஓய்வெடுக்கவும், இயற்கையான சூழலை பெறவும் உதவுகிறது. சென்னை செம்மொழி பூங்காவை போலவே பலதரப்பட்ட வசதிகள் மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் அமையவுள்ள கோவை பூங்கா அந்த பகுதியில் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளமாக மாற உள்ளது.

மேலும் படிக்க | 'ராம நவமியில் ராமர் பாலத்தை தரிசித்தேன்...' பிரமதர் மோடியின் தெய்வீக பதிவு...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News