John Jebaraj Arrested: கோவையில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அவரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில் இன்று (ஏப். 13) கைது செய்யப்பட்டுள்ளார்.
John Jebaraj Arrested: 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கிங் ஜெனரேஷன் என்ற சர்ச்சில் பாதிரியாராக பணியாற்றி வருபவர் ஜான் ஜெபராஜ் (32). இவர் கேரளாவில் மத போதகம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 11 மாதங்களுக்கு முன்பு கோவை ஜி.என். மில்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடந்த விழாவின்போது 17 வயது சிறுமிக்கும், 14 வயது சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
John Jebaraj Arrested: சிறுமிகளை மிரட்டிய ஜான் ஜெபராஜ்
சிறுமிகள் வீட்டிற்கு வரும்போது எல்லாம் மத போதகர் ஜான் ஜெபராஜ் பலமுறை பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாகவும், இந்த விவரத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள், பாதிரியாரின் தொடர் தொல்லை குறித்து தங்களது பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்து உள்ளனர்.
John Jebaraj Arrested: கோவையில் வழக்குப் பதிவு
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், கோவை போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
John Jebaraj Arrested: வலைவீசி தேடிய கோவை போலீசார்
இரு தனிப்படையினர் தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் முகாமிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஜான் ஜெபராஜ் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க கோவை மாநகர காவல் துறை சார்பில் லுக் அவுட் நோட்டீயை வழங்கினர்.
அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் லுக் அவுட் நோட்டீஸ் கோவை மாநகர காவல் துறை சார்பில் வழங்கப்பட்டிருந்தது.
John Jebaraj Arrested: சிக்கினார் ஜான் ஜெபராஜ்
இந்நிலையில், தமிழ்நாடு - கேரளா எல்லையான மூணார் பகுதியில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் இன்று (ஏப்ரல் 13) கைது செய்துள்ளனர். தொடர்ந்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். கிறிஸ்தவ மத போதகர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ஜான் ஜெபராஜ் குறித்த விசாரணையின்போது, அவர் வசித்து வந்த குடியிருப்புக்கு அருகில் வசிக்கும் கோபால் என்பவர் கூறுகையில்,"அவர் மர்மமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவர் இந்த குடியிருப்பில் இருப்பதே தெரியாத அளவுக்கு வாழ்ந்து வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டை காலி செய்து சென்றுவிட்டார்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி! அவரே சொன்ன முக்கிய தகவல்!
மேலும் படிக்க | வெளிநாட்டில் வேலை.. கோவையில் லட்சக் கணக்கில் மோசடி.. ஒருவர் கைது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









