த.வெ.க கொடியை தீயிட்டு எரித்த வைஷ்ணவி! விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு!

Tamilaga Vettri Kazhagam: "பழையன கழிதலும்" தமிழக வெற்றிக் கழகத்தின் டி-ஷர்ட் மற்றும் கொடியை எரித்த வீடியோ வெளியீடு - சமூக வலைதளங்களில் வைரல்!!  

Written by - RK Spark | Last Updated : Jan 15, 2026, 05:12 PM IST
  • த.வெ.க வில் இருந்து விலகி..
  • தி.மு.க வில் இணைந்த பெண் நிர்வாகி.
  • த.வெ.க கொடியை தீயிட்டு எரித்த வைஷ்ணவி.
த.வெ.க கொடியை தீயிட்டு எரித்த வைஷ்ணவி! விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு!

தமிழகம் முழுவதும் போகி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், கோவையைச் சேர்ந்த வைஷ்ணவி என்பவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியின் கொடி மற்றும் டி-ஷர்ட்டை தீயிட்டு எரிக்கும் வீடியோ வெளியிட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். கோவையை சேர்ந்த வைஷ்ணவி சில காலமாக தமிழக வெற்றிக் கழகத்தில் தீவிரமாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அக்கட்சியில் இருந்து விலகி அவர் அண்மையில் தன்னை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். போகி பண்டிகையான நேற்று "பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்பதற்கு ஏற்ப அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | நெசவாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மானியம்! உடனே விண்ணப்பிக்கவும் - முழு விவரம்

தீயிட்டு எரித்தார்

அதில் தான் வைத்து இருந்த தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி மற்றும் அந்த கட்சியின் லோகோ பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் ஆகியவற்றை தீயிட்டு எரித்தார். பொதுவாக அரசியல் கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறும் போது அமைதியாக செல்வதே வழக்கம். ஆனால் கட்சியின் அடையாளங்களை எரித்து வீடியோ வெளியிட்டு இருப்பது த.வெ.க தொண்டர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ எதிர்ப்பு கலந்த வைரலாகி வருகிறது. போகி பண்டிகை அன்று மேற்கொள்ளப்பட்ட இந்த அரசியல் போகி செயல் கோவையில் த.வெ.க மற்றும் தி.மு.க தொண்டர்கள் இடையே பெரும் விவாதங்களை உருவாக்கி உள்ளது.

விஜய் பொங்கல் வாழ்த்து!

கடந்த ஜனவரி 12ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆனார் விஜய். அதனை தொடர்ந்து சென்னை திரும்பிய அவர், மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு செல்ல உள்ளார். இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : தகுதியானவர்களுக்கு ரூ.1000 கிடைக்கும் - அமைச்சர் வாக்குறுதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News