குளச்சல் தேர்தல் முடிவுகள் 2026: கோட்டையை தக்கவைத்த காங்கிரஸ் - தவெக 2வது இடம்
Colachel Election Result 2026: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் (Colachel) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றிபெற்றார்.
குளச்சல் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள குளச்சல், தமிழக சட்டமன்றத்தின் 231வது தொகுதியாகும்.
குளச்சல் தொகுதி கடலோரப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களை உள்ளடக்கிய ஒரு முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ளது. மணவாளக்குறிச்சி மணல் ஆலை, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் ஆகியவை இத்தொகுதியின் முக்கியமான அடையாளங்களாகும்.
மீனவர், நாடார், வேளாளர் உள்ளிட்ட சமூகங்கள் கணிசமாக வாழ்கின்றனர். பட்டியலின மக்கள் மற்றும் இஸ்லாமியர்களும் வெகுவாக இங்கு வசிக்கின்றனர்
குளச்சல் தொகுதி சட்டசபை தேர்தல் 2026 விவரங்கள்
2026ஆம் ஆண்டு தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற்று முடிந்த நிலையில், 2026 மே 4 ஆம் தேதி (இன்று) குளச்சல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
குளச்சல் வேட்பாளர்கள் பட்டியல் 2026
காங்கிரஸ் (INC): தாரகை கத்பர்ட் (திமுக கூட்டணியில்)
பாஜக (BJP): டி. சிவகுமார் (அதிமுக கூட்டணியில்)
நாம் தமிழர் கட்சி (NTK): ஆன்சி ஷோபா ராணி
தமிழக வெற்றி கழகம் (TVK): பிரேம் அலெக்ஸ் லாரன்ஸ்
குளச்சல் சட்டசபை தேர்தல் முடிவு 2026
வெற்றி: தாரகை கத்பர்ட் - 66,207 வாக்குகள் (+2,833)
2ஆம் இடம்: பிரேம் அலெக்ஸ் லாரன்ஸ் - 63,374 வாக்குகள் (- 2,833)
குளச்சல் தொகுதி வாக்காளர் எண்ணிக்கை
ஆண் வாக்காளர்கள்: 1,32,540
பெண் வாக்காளர்கள்: 1,32,474
மூன்றாம் பாலினத்தவர்: 1
மொத்த வாக்காளர்கள்: 2,65,015
குளச்சல் தொகுதி வாக்கு சதவீதம்
2026 தேர்தலில் இத்தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம் சுமார் 74.02% ஆகும் (இது முந்தைய தேர்தலை விட 3% அதிகம்).
குளச்சல் சட்டசபை தேர்தல் முடிவு 2021
வெற்றி: பிரின்ஸ் (காங்கிரஸ்) - 90,681 வாக்குகள் (திமுக கூட்டணியில்)
இரண்டாம் இடம்: ரமேஷ் (பாஜக) - 65,849 வாக்குகள் (அதிமுக கூட்டணியில்)
நாம் தமிழர் கட்சி: ஆண்டனி ஆஸ்லின் - 18,202 வாக்குகள்
குளச்சல் தொகுதி சட்டசபை தேர்தல் 2021 வாக்கு சதவீதம்
2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் குளச்சல் தொகுதியில் 71.84% வாக்குகள் பதிவாகின.
கன்னியாகுமரி மாவட்டம் சட்டமன்றத் தொகுதிகள் பட்டியல்
கன்னியாகுமரி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
நாகர்கோவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
பத்மநாபபுரம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
விளவங்கோடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
கிள்ளியூர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ