)
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அவர் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து பயணித்து வருகிறார். தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் அவர், அப்படத்தின் பணிகள் முடிந்தவுடன் முழுமையாக அரசியல் களத்தில் குதித்து மக்களை சந்திக்க இருக்கிறார். தனது கட்சியின் முதல் கட்சி மாநாட்டை கடந்த ஆண்டு அக்டோபரில் விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடத்தி கட்சியின் கொள்கை, எதிரி யார் என்று கூறினார்.
இந்த சூழலில் கடந்த 21ஆம் தேதி மதுரை பாரப்பத்தியில், தமிழக வெற்றி கழக கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் 3 லட்சம் மக்கள் கூடியதாக கூறப்படுகிறது. மாநாட்டில் பேசிய விஜய், திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
குறிப்பாக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை அங்கிள் என்று குறிப்பிட்டு கிண்டல் செய்து விமர்சித்தார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையேதான் போட்டி என்றும் கூறினார். முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என கூறி கிண்டல் செய்ததற்கு திமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தரக்குறைவாக பேசியதாக விஜய் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் சிவசாகர் என்பவர் தவெக தலைவர் மீது புகார் அளித்துள்ளார். மதுரை பாரபத்தியில் நடந்த தவெக மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசியதாக சிவசாகர் புகார் அளித்துள்ளார். மேலும், விஜய் ரேம் வாக் செய்தபோது, தொண்டர்களை விஜய்யின் பவுன்சர்கள் ஈவு இரக்கமின்றி தூக்கி வீசியதாகவும் புகார் அளித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ