விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு.. ஜனநாயகன் விவகாரத்தில் செம ட்விஸ்ட்.. கூட்டணி கன்ஃபார்ம்?

Rahul Gandhi On Jana Nayagan Censor Board Issue: விஜய்யின் ஜனநாயகன் படத்தை  முடக்க நினைப்பது தமிழ் கலாசாரத்தின் மீது நடத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.   

Written by - Umabarkavi K | Last Updated : Jan 13, 2026, 02:49 PM IST
  • ஜனநாயகன் சென்சார் பிரச்னை
  • ராகுல் காந்தி போட்ட ட்வீட்
  • என்ன மேட்டர் தெரியுமா?
விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு.. ஜனநாயகன் விவகாரத்தில் செம ட்விஸ்ட்.. கூட்டணி கன்ஃபார்ம்?

Rahul Gandhi On Jana Nayagan Censor Board Issue: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.  இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பொங்கலுக்கு ஜனநாயகன் படம் வெளியாகி இருக்கும் நிலையில், தணிக்கை சான்றிதழ் காரணமாக படம் வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விஜய்யின் கடைசி படமாக இருக்கும் ஜனநாயகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது விஜய் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Add Zee News as a Preferred Source

விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு

இந்த விவகாரத்தில் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின் கூட சென்சார் பிரச்னை தொடர்பாக கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தற்போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பகீரங்க கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "ஜன நாயகன் படத்தை தடுக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சி தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகும்.

மோடி, தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் உங்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது" என குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தியை தொடர்ந்து, பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இதனால், வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தவெக காங்கிரஸ் கூட்டணி அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தவெக காங்கிரஸ் கூட்டணி?

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தேர்தல் தேதியை பிப்ரவரி மாதத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து கட்சி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். தேர்தலையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி வலுப்படுத்த சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மறுப்புறம், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் வலுவுடன் இருக்கம் நிலையில், தற்போது திமுக கூட்டணியில் சலசலப்புகள் இருந்து வருகிறது.

அதாவது, திமுக கூட்டணி உடையும் என பேசப்பட்டு வருகிறது.  திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், ஆட்சியில் அவர்களுக்கு பங்கு என்பது இல்லை. இதனால், தங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என கோரிக்கையை காங்கிரஸ் விடுத்தி வருகிறது. ஆனால், ஆட்சியில் பங்கு என்பதற்கு திமுக திட்டவட்டமாக மறுத்து வருகிறது.  இதனால், தவெகவுடன் கூட்டணி சேர காங்கிரஸ் பேச்சுவார்த்தி நடத்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 

ஜனநாயகன் பட விவகாரத்தில்  விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் பதிவிட்டு வருகின்றனர்.  இது கூட்டணி குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.  இந்த நிலையில் தான், முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு, காங்கிரஸ் தலைமையிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.  

மேலும் படிக்க: ஜனநாயகன் படத்திற்கு ஸ்கெட்ச் போட்ட சென்சார் போர்டு! உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News