சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு! லிட்டருக்கு எவ்வளவு? பெட்ரோல் விலையும் அதிரிக்குமா?

Cooking Oil Price Hike: போர் பதற்றம் காரணமாக, சமையல் எண்ணெய் விலை அதிதடியாக உயர்ந்துள்ளது. லிட்டருக்கு ரூ.170 வரை அதிகரித்துள்ளது.   

Written by - Umabarkavi K | Last Updated : Mar 14, 2026, 05:28 PM IST
  • சமையல் எண்ணெய் விலை உயர்வு
  • லிட்டருக்கு ரூ.170 வரை உயர்வு
  • பெட்ரோல், டீசல் விலையும் உயருமா?
சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு! லிட்டருக்கு எவ்வளவு? பெட்ரோல் விலையும் அதிரிக்குமா?

Cooking Oil Price Hike: மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் நிலவி வருகிறது. ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே போர் நடந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உலக நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் லோடுகளை ஏற்றிச் செல்லும்  பிரதான வழித்தடமான ஹார்மூஸ் ஜலசந்தி வழிப்பாதையை ஈரான் மூடியது. இதனால், கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் தாக்கம் இந்தியாவில் கடுமையாக எதிரொலித்துள்ளது. ஏரிவாயு சிலிண்டர், வர்த்தக சிலிண்டர் விலைகள் உயர்த்தப்பட்டது.  

Add Zee News as a Preferred Source

சமையல் எண்ணெய் விலை உயர்வு

மேலும், இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஓட்டல்கள் முழுமையாக செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டால், பெரும்பாலான ஓட்டல்கள் விறகு அடுப்பிற்கு மாற்றியுள்ளனர். இதுஒரு புறம் இருக்க, பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.  

தொடர்ந்து, பெட்ரோல் டீசல் விலை உயர உள்ளதாகவும், தட்டுப்பாடு ஏற்பட போவதாவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில், சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இந்த நிலையில், சமையல் எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.  மேற்கு ஆசியாவில் போர் நடந்து வரும் நிலையில், இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?

 கடந்த மாதம் சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.155 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.170 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, பாமாயில் விலை லிட்டருக்கு ரூ.110 ஆக இருந்தது. தற்போது ரூ.122 ஆக உயர்ந்துள்ளது.  கடலை எண்ணெய், குங்குமப்பூ எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற பிற சமையல் எண்ணெய்களின் விலையும் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்ந்துள்ளது. 

இந்தியா சமையல் எண்ணெய்களில் சூரியகாந்தி, பாமாயில் உள்ளிட்டவற்றை மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. சராசரியாக ஒவ்வொரு மாதமும் சுமார் 6 லட்சம் டன் பாமாயில், 3 லட்சம் டன் சோயாபீன் எண்ணெய், 1 லட்சம் டன் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்றன. 

முன்னதாக, சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி 26.5 சதவீதம் ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அதை 16.5 சதவீதமாக குறைத்தது. இதனால், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாமாயில் விலை லிட்டருக்கு சுமார் 10 ரூபாய் குறைந்தது.  இந்த நிலையில், தற்போது  போர் பதற்றம் காரணமாக சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், இல்லதரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர். 

விலை உயர்வுக்கு காரணம் என்ன?

இந்தியா அதிக அளவில் வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது. குறிப்பாக, பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் ஆகியவற்றை வெளிநாடுகளில்  இருந்து இறக்குமதி செய்கிறது. அங்கு தற்போது போர் பதற்றம் நிலவுவதால்  எணணெய் தயாரிக்கும் பணிகள் முடங்கியுள்ளது. மேலும், கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால்,  வீட்டு சமையல் எண்ணெய் விலை கடுமையாக இந்தியாவில் உயர்ந்துள்ளது. இந்தோனேசியா, மலேசியா, உக்ரைன்,  அர்ஜன்டினா, பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. போர் பதற்றத்தால் எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டதை அடுத்து, எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயருமா?

சமையல் எண்ணெய்யை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயமும் இருக்கிறது.  ஈரான் தற்போது கடல் போக்குவரத்து மூடியாதல், கச்சா எண்ணெய் இறக்குமதி  பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா சுமார் 85 சதவீதம் கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. தற்போது ஈரானில் போர் பதற்றம் நிலவுவதால் ஹார்மூஸ் ஜலசந்தி வழியை ஈரான் மூடியதால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.  இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் உள்ளது.  மேலும், தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. 

இதனால், கடந்த மூன்று தினங்களாகவே மக்கள் பெட்ரோல் பங்கில் லிட்டர் கணக்கில் பெட்ரோல் நிரப்பி வருகின்றனர்.  மேலும், ஆபத்தான வகைகளில் பாட்டில்கள், கேன்களில் பெட்ரோல் டீசலை அதிகளவில் நிரப்பி வருகின்றனர். இதற்கிடையில், மத்திய அரசு பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு இருக்காது என கூறியிருக்கிறது. அடுத்த 90 நாட்களுக்கு பெட்ரோ டீசல் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.  மேலும், பெட்ரோல் டீசல் பிளாஸ்டிக் கேன் போன்றவற்றை ஆபத்தான முறையில் வாங்க வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க: LPG தட்டுபாடு: மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மானியம்... ஹோட்டல்களுக்கு ஜாக்பாட்!

மேலும் படிக்க: வாடகைக்கு வீடு விடுபவர்கள் கவனத்திற்கு! இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News