உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரிலி அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலின் 5 ஆம் பிரகாரத்தில் கணவன் மனைவி இருவரும் அமர்ந்து முட்டை பிரியாணியுடன் சிக்கன் கிரேவி சாப்பிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், அண்ணாமலையாரின் புனிதத்தை கெடுக்கும் வகையில் கோவில் வளாகத்திற்குள் அசைவம் சாப்பிட்டுள்ளனர்.
மேலும் படிங்க: விஜய்யுடன் தேமுதிக கூட்டணியா? பிரேமலதா விஜயகாந்த் சொன்ன பதில்!
நேற்று பிற்பகல் திருவண்ணாமலை மாநகரில் உள்ள ராமலிங்கனார் தெருவை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் முட்டை பிரியாணியுடன் சிக்கன் கிரேவி பார்சல் வாங்கிக் கொண்டு கோபுரத்திற்கு உள்ளே வந்து 5 ஆம் பிரகாரத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை அந்த வழியாக வந்த நபர் பார்த்து அதிர்ச்சியடைந்து, கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் அவர்களை தடுத்து விசாரனைக்காக திருவண்ணாமலை மாநகர காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்ததுடன் மாநகர போலீசார் மாமிச உணவு சாப்பிட்ட தம்பதியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கடந்த சில மாதங்களாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில் கணவன் மனைவி ஆகிய இருவரும் முட்டை பிரியாணி வாங்கி கோவிலுக்குள் சாப்பிட்டது ஆன்மீக பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இன்று அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு கருவறையிலன் முன்பு சூரிய பகவான் அருகே புனித கலசங்கள் வைக்கப்பட்டு ஸ்தபன யாக பூஜை செய்யப்பட்டது, கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்தபன யாக பூஜை நிறைவடைந்த உடன் புனித நீர் திருக்கோவிலில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவிலில் உள்ள ராஜகோபுரம், பெரிய நந்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் புனித நீர் தெளிக்கப்பட்டு பிராயசித்த பூஜை செய்யப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









