Annai Illam Case Latest UPdate: அன்னை இல்லம் தொடர்பாக நடிகர் பிரபுவின் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் என்ன? இந்த மனோதாக்கல் தொடர்பான தகவல்களை குறித்து பார்ப்போம்.
ஜெகஜால கில்லாடி (Jaga Jaala Killaadi) என்ற படத்தின் தயாரிப்புக்காக நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் புஷ்யன் பெற்ற கடன் வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்ச ரூபாயை திருப்பி தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த அன்னை இல்லம் வீடு தனக்கு சொந்தமாகும் என்பதால், ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடிகர் பிரபு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் துஷ்யந்தின் தந்தை ராம்குமார் இந்த அன்னை இல்லத்தின் மீது தனக்கு எந்த உரிமையும் பங்கும் இல்லை என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்து வந்தார். இந்த வழக்கு இன்றைக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நடிகர் பிரபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அன்னை இல்லம் வீட்டின் மீது ஒரு முழுமையான உரிமைதாரர் பிரபு மட்டும் தான். அந்த வீட்டின் மீது ராம்குமாருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வாதிட்டார்.
மேலும் நீதிமன்றம் கருணை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு வெகு காலத்திற்கு முன்பாகவே அந்த வீட்டை நடிகர் சிவாஜி கணேசன் நடிகர் பிரபுவுக்கு உயில் எழுதி கொடுத்திருக்கிறார். அந்த அடிப்படையில் பத்திரப்பதிவும் நடைபெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டார். எனவே நீதிமன்றம் ஜஸ்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்த வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல கோடி ரூபாய் மதிப்பிலான 22 கிரவுண்டு பரப்பிலான அமைந்திருக்கக்கூடிய அந்த அன்னை இல்லம் வீட்டை ராம்குமார் தனது உரிமையை விட்டுக்கொடுத்தார் என்பதை நம்ப முடியவில்லை என்றும், இந்த சொத்தின் உரிமையானது நடிகர் பிரபுவிதம் இருக்கிறதா என்பதை முழுமையான விசாரணைக்கு பிறகுதான் முடிவு செய்ய முடியும் என்பதால், இந்த ஜப்தி உத்தரவை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார்.
இதனையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி நடிகர் பிரபு தாக்கல் செய்த மனுமீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
மேலும் படிக்க - ஜப்தி ஆகும் சிவாஜி கணேசனின் வீடு... பேரனால் வந்த சோதனை - பின்னணி என்ன?
மேலும் படிக்க - பாராதி ராஜாவை ‘சின்ன வீடு’ கட்டச்சொன்ன சிவாஜி! சொன்ன காரணம்தான் ஹைலைட்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









